2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக் கோரிக்கை

Editorial   / 2018 ஜனவரி 09 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆகக்குறைந்தது 2,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அந்தச் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் தொழிற்சங்கம் கோரியுள்ளது.  

2018 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வரையில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1,200 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.  

இந்தச் சம்பள அதிகரிப்பு, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை காணப்படாத காலப்பகுதியில் பிரேரிக்கப்பட்டது. தற்போது இந்தச்சலுகை இலங்கைக்கு மீளக்கிடைத்துள்ளது. இந்நிலையில் 1,200 ரூபாய் சம்பள அதிகரிப்பு ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, 2,000 ரூபாய் வரை இந்தத் தொகையை அதிகரிக்குமாறு கோரி, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைந்த செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார்.   

இலங்கைக்கு மீள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கப்படுகையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளுக்கு முரணான வகையில் இந்தச் சம்பள அதிகரிப்பு அமைந்துள்ளதாகவும், இந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.  

ஐரோப்பிய நாடுகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆடை ஏற்றுமதிகளுக்கு 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் ஊக்குவிப்புக் கிடைத்துள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்ததையும் அவர் மீள நினைவூட்டியிருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .