2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செம்சன் ரஜரட்ட டைல்ஸுக்கு விருது

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் (NCCSL), அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் விழாவில் - இரசாயனங்கள், செரமிக் வகைகள் மற்றும் கண்ணாடி உற்பத்திப் பொருட்கள் பிரிவில், செம்சன் ரஜரட்ட டைல்ஸ் பிறைவேட் லிமிட்டெட் நிறுவனம் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  

குழுமத் தலைமைத்துவம், குழும ஆளுமை, திறமை வளர்ச்சி, பெறுபேறுகள் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தை ஆய்வு, குழும சமூகப் பொறுப்பு, சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமை போன்றவற்றுடன், வர்த்தக மற்றும் நிதிப் பெறுபேறுகள் என்பனவற்றையும் கவனத்தில் கொண்டு, உள்நாட்டு வர்த்தகங்களை NCCSL மதிப்பீடு செய்து வருகிறது.  

செம்சன் ரஜரட்ட டைல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள திறப்பனை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. தலைநகரின் நெரிசல் நிலைகளில் இருந்து விலகிச் சென்று, கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை விருத்தி செய்யும் நோக்கத்துடன் நிறுவனம் தனது தொழிற்சாலையை அங்கு அமைத்துள்ளது. சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்காக அநுராதபுரத்தின் சுரங்கங்களில் உள்ள களிமண் பயன்படுத்தப்படுகின்றன.இங்கு தயாரிக்கப்படும் ஓட்டு வகைகள், பல விசேட அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளன. ஏனைய போட்டி உற்பத்தி நிலையங்கள் விறகுகள் மூலம் எரித்து தயாரித்தாலும், செம்சன் ரஜரட்ட டைல்ஸ், காஸ் மற்றும் டீசல் என்பனவற்றின் மூலமே எரிக்கப்படுகின்றன.

இதனால் அனைத்து வகையான ஓடுகளும் சீரான முறையில் சரியான பதத்தை அடைந்து கொள்கின்றன. அவற்றின் அளவுகளிலும், வடிவத்திலும் மாற்றங்கள் ஏற்படாது பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஓடும் கடுமையான அழுத்தத்துக்கு முகம் கொடுத்து, 1200N சக்திக்கும் தாக்குப் பிடிக்கக்கூடியது.

மேலும், செம்சன் ரஜரட்ட டைல்ஸ், இலங்கையிலுள்ள ஒரேயொரு இன்டர்லொக்கின் டைல்ஸ் முறைமையாகச் செயற்படுகிறது. அவற்றைப் பதிக்கும்போது ஒன்றோடு ஒன்று இணைந்து கொள்கின்றன. நீர் ஊறும் தன்மை 10% வீதத்துக்கும் குறைவாக இருப்பதோடு, இதனால் கசியும் தன்மை பூச்சியமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .