2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செலான் வங்கியின் முதல் காலாண்டு வரிக்குப் பின்னரான இலாபம் ரூ. 866 மில்லியன்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறுதியற்ற சந்தை நிலைவரங்களுக்கு மத்தியிலும் 2017ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ. 866 மில்லியனை செலான் வங்கி பதிவு செய்துள்ளது.  

வங்கி தனது தேறிய வட்டி வருமானத்தை அதிகரித்துக் கொண்டுள்ளதுடன், ஆதாய எல்லைகள் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டிருந்த நிலைமையிலும் கூட 20.97% அதிகரிப்பை வங்கி பெற்றிருக்கின்றது. எவ்வாறிருப்பினும், தேறிய வட்டி எல்லையானது, 4.19% இலிருந்து 3.92% ஆக சிறிதளவு குறைவடைந்தது. கடன்களின் மீள் விலையிடலை விடவும் வேகமான அடிப்படையில் வைப்புக்களின் கிரயங்கள் அதிகரித்தமையே இதற்கு காரணமாகும். 

கடந்த வருடத்தில் இதனுடன் தொடர்புபட்ட காலத்தில் ரூ. 695 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 2017இன் முதலாம் காலாண்டில் ஆரோக்கியமான விதத்தில், 24.94% வளர்ச்சியடைந்து ரூ. 869 மில்லியனாக அதிகரித்தது. இது அட்டைசார் வருமானம், வர்த்தக நிதிசார் கட்டண வருமானம் மற்றும் உத்தரவாதங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற கட்டணம், பணவனுப்பல்கள் போன்ற மைய வங்கியியலுடன் தொடர்பான வியாபார நடவடிக்கைகளின் காரணமாக மேற்படி வருமான அதிகரிப்பு ஏற்பட்டது. இதேவேளை, வரவு மற்றும் கடன் அட்டைகள் மற்றும் வணிகத்துடன் தொடர்புபட்ட சேவைகளின் ஊடாக தனது கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு வங்கி தொடர்ந்தும் எதிர்பார்த்துள்ளது.  

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதி முதலீடுகளில் இருந்தான ஆதாயங்கள், அந்நிய செலாவணியின் மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது, 2016 இன் முதலாம் காலாண்டில் ரூ. 68 மில்லியன் நட்டமாக காணப்பட்டிருந்த நிலையில், 2017இன் முதலாம் காலாண்டில் தேறிய ஆதாயம் ரூ. 299 மில்லியனாக அதிகரித்திருக்கின்றது.  

இக்காலப்பகுதியில் கடன்களுக்கான மதிப்பிறக்க அறவீடுகள் மற்றும் ஏனைய நட்டங்கள் ரூ. 346 மில்லியனாக பதிவாகியது. இந்த அறவீட்டுத் தொகையானது, 2016 இன் முதலாம் காலாண்டில் ரூ. 84 மில்லியனாக காணப்பட்டது. ரூ. 253 மில்லியனாக காணப்பட்ட பிரத்தியேக கடன் மதிப்பிறக்க ஏற்பாட்டு அறவீடுகள் ஒரு சில கடன் இடர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இவ்வாறான கடன் வசதிகளினூடாக ஏதேனும் குறிப்பிடத்தக்க நட்டங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு செலான் வங்கி மிக இறுக்கமான மீள் அறவீட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .