2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செலான் வங்கியின் 150ஆவது ‘பஹசர’ நூலகம் திறந்து வைப்பு

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கியின் பிரதான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான ‘செலான் பஹசர’ ஊடாக, பல குறைந்த வசதிகள் படைத்த பாடசாலைகளுக்கு கல்வி வசதியை மேம்படுத்திக் கொள்வதற்காக நூலகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதன் 150ஆவது நூலகம் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனூடாக கன்னங்கர வித்தியாலயத்தின் நூலகத்துக்கு புத்தகங்கள் மற்றும் கணனிகளை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு E-புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நூலகத்துக்கு, மல்டிமீடியா புரொஜெக்டர் ஒன்றை வங்கி அன்பளிப்பு செய்துள்ளதுடன் மாணவர்களுக்குத் தரமான கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.  

2013 மார்ச் 01ஆம் திகதி, ஆரம்பிக்கப்பட்ட ‘செலான் பஹசர’ செயற்திட்டம், அநுராதபுரத்தில் வங்கியின் 25 வருட பூர்த்தி நிகழ்வுகளுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ‘அன்புடன் அரவணைக்கும்’ வங்கி எனும் தனது தொனிபொருளுக்கமைய செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது. 

இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, 100ஆவது நூலகம், 2016 மார்ச் 29ஆம் திகதி மொரட்டுவ, வீரபுரான் அப்பு மாதிரி பாடசாலையில் நிறுவப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இந்தப் பயணம் தொடர்ந்திருந்தது. 

இந்தச் சாதனை தொடர்பில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியைச் சேர்ந்த நாம், ‘செலான் பஹசர’ திட்டத்தை வங்கியின் கூட்டாண்மை சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக முன்னெடுத்து வருகிறோம்.

இந்தச் சாதனையுடன் செலான் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவைகளை வழங்குவது என்பதில் கவனம் செலுத்துவதுடன், தனது வியாபாரத்திலும், அபிவிருத்திக்கான நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறது.

‘செலான் பஹச’ உடன், குறைந்த வசதிகள் படைத்த நூலகங்களுக்கு நாம் வலிமை சேர்ப்பதுடன், தரம் வாய்ந்த கல்வியின் மூலம், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளோம்.

இதனூடாக அவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அனுபவிக்க வாய்ப்பளிப்பதுடன், நவீன கல்விசார் போக்குகளைப் பின்பற்றவும் வசதியளிக்கிறோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .