2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செலிங்கோ லைஃப் அறிமுகப்படுத்தும் ‘குரு அபிமானம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களின் ஓய்வு காலச் சேமிப்பைப் பிரத்தியேக இலக்காகக் கொண்டு செலிங்கோ லைஃவ் விசேடமானத் திட்டமொன்றை வடிவமைத்துள்ளது. ஆசிரியர்களின் சமூக ரீதியான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  

‘குரு அபிமானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் ஆசிரிய சமூகத்துக்கான ஒரு கௌரவமாகும். இந்தத் திட்டத்தை தொடங்கி பத்து வருட காலப்பகுதிக்குள் அல்லது ஆசிரியர்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொத்தத் தொகையை அல்லது மாதாந்த ஓய்வூதியமாக ஒரு கொடுப்பனவுத் தொகையைப் பெற்றுக் கொள்ள இந்தத் திட்டம் வழிவகுக்கும்.  

வெறும் 1,500 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவின் மூலம் ‘குரு அபிமானம்’ விசேட ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இது ஆசிரியரகளுக்கு மாதாந்தம் ஒரு தொகையை சேமிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. இந்தச் சேமிப்பை காலாண்டு அடிப்படையில் அல்லது அரையாண்டு அடிப்படையில் அல்லது வருடாந்த அடிப்படையில் தமது தெரிவுக்கு ஏற்ப அவர்கள் மேற்கொள்ளலாம்.  

தற்போது நிதிச் சந்தையிலுள்ள ஏனைய சேமிப்புகளைப் போல் அன்றி வரியற்ற மீள் வருமானத்தை இது உறுதி செய்கின்றது. வாழ்க்கைச் செலவுகள் அன்றாடம் அதிகரித்து வருகின்ற இந்தக் காலப்பகுதியில் ஓய்வு பெறும் காலத்தில் யாரிடமும் தங்கி இருக்காமல் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கக் கூடிய சேமிப்புக்கான வாய்ப்பை இத்திட்டம் அளிக்கின்றது.

இந்தச் சேமிப்பின் மீதான வட்டி மாதாந்தம் கணிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சேர்க்கப்படுவதால் முதிர்ச்சியின் போது ஆகக் கூடுதலான ஒரு தொகையை மீளப் பெற்றுக் கொள்ளவும் இது வழி அமைக்கின்றது.  
இந்த அற்புதமான ஓய்வூதியத் திட்டத்தின் அறிமுகம் பற்றி கருத்து வெளியிட்ட செலிங்கோ லைஃவ் பணிப்பாளரும் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷார ரணசிங்க “குரு அபிமானம் அறிமுகம் ஆசிரியத் தொழில் என்பது மிகவும் பெறுமதி மிக்க ஒரு தொழில் என்ற எமது கருத்தோடு இணைந்ததாக உள்ளது. எனவே, ஓய்வு பெறும் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தை நிதி ரீதியாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. அவர்களது அர்ப்பணம் மிக்க சேவைக்கான ஒரு கௌரவமாக இதை செய்கின்றோம். எதிர்கால சமூகத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றும் ஆசிரிய சமூகம் வரையறுக்கப்பட்ட நலன்புரி வசதிகளையும் சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் கொணடுள்ளதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம். இந்த ஓய்வுகாலத் திட்டமானது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வலையொன்றை ஏற்படுத்தும் என்று நாம் நம்பகின்றோம்” என்று கூறினார்.  

2016ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டு புள்ளி விவரங்களின் படி இலங்கையில் தனியார் அல்லது அரச பாடசாலைகளிலும் கல்விக் கூடங்களிலும் பணியாற்றும் 230000 ஆசிரியர்கள் உள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X