2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜப்பானில் சுயமாக இயங்கும் கார்கள் பரிசோதனை

Editorial   / 2018 ஜனவரி 09 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயமாக இயங்கும் கார்களைப் பரிசோதிக்க ஜப்பான் முன்வந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை ஜப்பானின் ‘நிஷான்’ நிறுவனம் தனது லீஃவ் ரக கார்களைப் பயன்படுத்தி, மார்ச் மாதம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  

சுயமாக இயங்கும் கார்களைப் பரிசோதிப்பதில் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஜப்பான் பின்னடைந்த நிலையில் காணப்படுவதுடன், தமது செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் வகையில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள ஜப்பான் தீர்மானித்துள்ளது.  

இதற்கமைய இந்தப் பரிசோதனைக்கு அவசியமான மென்பொருள், கெமராக்கள் மற்றும் உணரிகள் போன்றன தயாராகியுள்ள நிலையில், ஏற்கெனவே பதியப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி இவை இயங்கும்.  

பயணிகள் ஆசனத்தில் சாரதி ஒருவர் இந்தப் பிரயாண இயக்கங்களைக் கண்காணித்த வகையில் அமர்ந்திருப்பார். பொது மக்களைத் தன்னார்வ அடிப்படையில் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வருமாறு நிஷான் நிறுவனம் அழைத்துள்ளது.  

இந்தக் கார்கள் முதலில் வாடகைக் கார் வகையாக அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், இதற்காக விசேடமாக அமைந்த app ஒன்றும் அறிமுகம் செய்யப்படும்.   

2022ஆம் ஆண்டளவில், இந்தக் கார்களை வீதியில் பயணிக்கும் வகையில் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், பரிசோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகவும் ‘நிஷான்’ தலைவர் கார்லோஸ் கோசன் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .