2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டயலொக் வழங்கும் Unlimited Plans

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான தொலை த்தொடர்பாடல் சேவை வழங்குனரான Dialog அக்ஸியாட்டா பிஎல்சி முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு டயலொக்கிலிருந்து டயலொக்குக்கான (D2D) வரையறையற்ற அழைப்பு நேரத்துடன் Data மற்றும் ஏனைய வலையமைப்புகளுக்கான அழைப்பு நேரத்தைக் கொண்ட பக்கேஜ்கள் உள்ளடக்கிய ‘Dialog Blaster Unlimited’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பக்கேஜ்களில் காணப்படும் வரையறையற்ற நன்மைகளை அனுபவித்திட முடிவதுடன் 13 மில்லியனுக்கும் அதிகமாக இலங்கையர்களுடன் இப்போது இணைந்திருக்கவும் முடியும்.   

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் 222 ரூபாய்க்கு 7 நாட்களுக்கு D2D வரையறையற்ற அழைப்பு நேரத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் சந்தையில் மிகக்குறைந்த கட்டணத்திற்கு 30 நாட்களுக்கு 777 ரூபாய்க்;கு D2D வரையறையற்ற அழைப்பு நேரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.  

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்த தேவைகளுக்கமைய 777 ரூபாய் மாதாந்த கட்டணத்துக்கு டயலொக்கிலிருந்து - டயலொக்குக்கு வரையறையற்ற அழைப்பு நேரத்தையும், 1500 ரூபாய் மாதாந்த கட்டணத்துக்கு டயலொக்கிலிருந்து டயலொக்குக்கு வரையறையற்ற அழைப்பு நேரத்தினையும், ஏனைய வலையமைப்புகளுக்கு 500 நிமிட அழைப்பு நேரத்தினையும் மேலும் 4GB Data வையும் பெற்றுக்கொள்ள முடியும்.  

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய டயலொக் அக்ஸியாட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க நிர்வாகி கலாநிதி ரெய்னர் டெய்ட்ஸ்மன், “டயலொக் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு விரிவான குரல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இலங்கையிலுள்ள அனைவரும் கவர்ச்சிகரமான மாதாந்த வாராந்த திட்டங்கள் மூலம் 13 மில்லியன் இலங்கையர்களுடன் வரையறையின்றி கதைத்து மகிழ முடியும். இலங்கையர் அனைவருக்கும் சிறந்த வலையமைப்பு மூலம் புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .