2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் பக்க விளைவுக்கு JAT Furnishing தரும் தீர்வு

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட நேரத்திதுக்கு அசௌகரியமான நிலையில் அமர்ந்திருத்தல் மற்றும் அசௌகரியமான நாற்காலிகளில் அமர்ந்திருத்தல் என்பன எம்மை மரணத்துக்கு அழைத்துச்செல்லலாம் என, நிபுணர்கள் கண்ட‌றிந்துள்ளனர். ஆகையால், ‘அமர்ந்திருப்பது இன்னுமொரு வகையிலான புகைப்பிடித்தலாகும்’ என்பது, தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதமாகக் காணப்படுகின்றது. 

இந்தப் பழக்க வழக்கங்களானது முக்கியமாகக் கழுத்து,  முதுகுப்புறப் பகுதியிலும் உடற்தோற்றத்தின் நிலையிலும் குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்சினைகளைச் சகல வயதினர் மத்தியிலும் ஏற்படுத்துகின்றது. மருத்துவ வல்லுநர்களால் ‘iPad Neck’ எனப்படும் ஒரு வித நோயை  உருவாக்கும் நிலைக்குச் செல்லுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.   

அடிமுதுகு வலிக்கான பொதுவான காரணமாக, உடற்தோற்ற நிலையில் ஏற்படுகின்ற அழுத்தமே காணப்படுகின்றது. அசௌகரியமற்ற நிலைகளில் நீண்ட நேரத்துக்கு அமர்ந்திருப்பதாலேயே அடிமுதுகு வலி ஏற்படுகின்றது.

 நீங்கள் முன்னதாகச் சாய்ந்து எவ்வளவு நேரத்துக்கு அவ்வாறானதொரு நிலையிலே காணப்படுகின்றீர்களோ, அதுவே உங்களுடைய மேல் முதுகு மற்றும் கழுத்தானது எவ்வளவு மேலதிக வேலையை செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்கின்றது.   

ஒரு நாற்காலியிலிருந்து உங்களுடைய முதுகுக்கு முறையான ஆதரவின்மை அல்லது கிடைக்கும் ஆதரவானது மிகவும் மென்மையானதாக காணப்படுதலே, இவ்வாறான பொதுப் பிரச்சினைகளுக்கான காரணிகளாகக் காணப்படுகின்றன.  

அதிகரித்து வரும் இப்பிரச்சினைகளைத் தடுக்கும் வகையில், இலங்கையின் முதன்மையான வாழ்க்கை முறைமை நிறுவன சின்னமான JAT Holdings ஆனது, முக்கியமாக நாளில் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கும் அலுவலகங்களுக்க ஏற்ற வகையில், பணிச்சூழலியலில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி வகைகளை அறிமுகப்படுத்துகின்றது. 

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Herman Miller வியாபாரக் குறியானது, ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, மனித உடல் தோற்றத்தை கருத்தில் கொண்டு, நாற்காலிகளை வடிவமைப்பதில் அனுபவத்தை கொண்டுள்ளது.   

இந்த நாற்காலிகள் முதுகு வலியை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளைத் தடுப்பதுடன், நபர் ஒருவர் நீண்ட நேரம் நிமிர்ந்த நிலையில் அமர்ந்திருப்பினும், சௌகரியமாக அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

புதுப்பிக்கப்பட்ட JAT தளபாட காட்சியறையில், Herman Miller இன் சகல வகைகளையும் பெற்றுக்கொள்ள இயலும். இவ்வாறான ஒரு வகை நாற்காலி ‘Aeron’ என அழைக்கப்படுவதுடன் பூரணமான தோற்ற அமைவுடன் காணப்படுகின்றது.    

மற்றைய நாற்காலிகளைப் போலல்லாது, மனிதரை மய்யப்படுத்திய புதுமையான மற்றும் எப்பொழுதும் காணப்படாத வகையிலான தொழில்நுட்பங்களுடன் இவ்வகையான நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பணிச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், செயற்றிறன் மிக்க வகையிலும், சூழலுக்குப் பொருத்தமான வகையிலும் இந்நாற்காலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.   

இந்த ஆரோக்கியநிலை வடிவமைப்பானது, உங்களுடைய முதுகுத்தண்டுக்குப் பொருத்தமான விதத்தில், வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன், இடுப்புப் பகுதிக்குத் தேவையான ஆதாரத்தையும் வழங்குகின்றது. 

இவ்வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சாய்வான பொறிமுறையானது, நீங்கள் நகரும்பொழுது நகர்வதுடன் நீங்கள் பல பணிகளை செய்யும்போது தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் ஆதரவை வழங்கும் என்பதை உறுதி செய்கின்றது.   

எந்தவோர் உடல் அளவுக்கும்  பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இதன் வடிவமைப்பானது தனித்துவமானதாகக் காணப்படுகின்றது. ஒரு கையுறையைப் போன்று, பயன்படுத்துபவர்களுக்கு மூன்று வித அளவுகளில் மாற்றமடைந்து பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

கொள்வனவு செய்து தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் உருக்கு என்பனவற்றின் ஒரு கலவையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எப்பொழுதும் கேள்விப்படாத 12 வருடங்களுக்கு முன்னர், மூன்று சுழற்சி மற்றும் நிபந்தனையற்ற உத்தரவாதம் என்பனவற்றுடன் வரும் இந்நாற்காலிகளை வெவ்வேறுபட்ட நிறங்கள் மற்றும் மாதிரிகளில் கோல்ட்ஸ் பில்டிங், 241, கோட்டைத்தெரு, கொழும்பு - 8 எனும் முகவரியில் அமைந்துள்ள காட்சியறையில் பெற்றுக்கொள்ள இயலும். JAT Furnishings இனது நாற்காலி வகைகளை, www.jatholdings.com எனும் இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .