2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிர்மாணத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லை

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நிர்மாணத்துறை துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்தத் துறையில் காணப்படும் இரு பிரதான சவால்களாகப் போதிய ஊழியர்கள் இன்மை மற்றும் அதிகரித்துச் செல்லும் உயர்ந்த செலவீனங்கள் போன்றன காணப்படுவதாக ரிசேர்ச் இன்டெலிஜன்ஸ் யுனிட் (RIU) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கு போதிய ஊழியர்கள் இன்மைக்கு இரு காரணிகள் காணப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இவ்வாறான ஊழியர்களில் பெருமளவானவர்கள் முச்சக்கர வண்டி செலுத்துநர்களாக இயங்குகின்றமையும் மற்றொரு தரப்பினர் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்காகச் செல்கின்றமையும் இந்தப் பற்றாக்குறையில் பங்களிப்பு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இந்த நிர்மாணத்துறையில் பணியாற்றக்கூடிய திறன் படைத்தவர்கள், அங்கு காணப்படும் அதிகளவு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பை எதிர்பார்த்து, இவ்வாறு பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் போது, நாட்டில் நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கு 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறித்த நிர்மாணச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக நிர்மாண செலவீனம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .