2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள்

Editorial   / 2017 ஜூன் 16 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

DSI, இலங்கை மருத்துவ சங்கத்தின் நிரோகி லங்கா செயற்றிட்டத்துடன் மீண்டும் இணைந்துள்ளது. இதன்மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விசேட பாதணிகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்த இணைப்பின் அடிப்படை நோக்கம், நீண்ட காலமாக காணப்படும் குருதியின், அதிக சக்கரையினால் ஏற்படக்கூடிய குறைந்த உணர்வுத் தன்மை மற்றும் இரத்த சுழற்சியினால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்கும் வகையில், விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பாதணிகளை அணிந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி, சக்கரை நோயாளிகளுக்கு விளக்கமளிப்பதாகும். 

நாட்டின், குறிப்பிடத்தக்க ஒரு சனத்தொகையினர், நீரிழிவு நோயினால் அவஸ்தைப்படுவது தொடர்பாக அவதானித்த DSI நிறுவனம், தனது குழும சமூகப் பொறுப்பு செயற்பாடுகளில் ஒன்றாக, நீரிழிவு நோயாளிகளின் பாதங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு பெற்றுக்கொடுத்து, பெறுமதி மிக்கச் சேவை ஒன்றை வழங்குகிறது. நிரோகி பாதணிகள் 6 விசேட வடிவங்களில் ஆண், பெண் இரு பாலாருக்கும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இவற்றுக்கான விலை ரூ. 999.90 இலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான, நாடு தழுவிய DSI காட்சியறைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு மேலதிக பாதுகாப்புடன் கூடிய இந்த விசேட பாதணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

DSI மற்றும் நிரோகி லங்காவின் நான்கு வருடங்களுக்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு, உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம், அண்மையில், கொழும்பு 7 இல் அமைந்துள்ள, இலங்கை மருத்துவ சங்கக் காரியாலயத்தில் உறுதி செய்யப்பட்டது. டி சம்சன் அன்ட் பிரைவெட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துஷித ராஜபக்ஷ நிறுவனத்தின் சார்பில் கைச்சாத்திட்டார். பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் ருவைஸ் ஹனிபா ஆகியோரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .