2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியிடமிருந்து சிறுவர்களுக்கு இயற்கை நடை வாய்ப்பு

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு இயற்கை நடை பவனி ஒன்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஏற்படுத்திக்கொடுத்திருந்தது. தலவத்துகொடை உயிரியல் பரம்பல் கற்கை பூங்காவில், இந்த நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

உயிரியல் பரம்பல் தொடர்பாடல் நிபுணத்துவம் மற்றும் சூழல் கற்கை போன்றன வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. இந்த அமைப்புடன் வங்கி நீண்ட காலமாக பங்காண்மையை பேணி வருகிறது. 

31 சிறுவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றிருந்தனர். நாட்டில் வெள்ளம் காரணமாக பெருமளவு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில், நகர ஈரநிலங்கள் தொடர்பான முக்கியத்துவம் குறித்த விளக்கங்கள் இந்த நடை பவனியில் உணர்த்தப்பட்டிருந்தன.

சர்வதேச சுற்றுப்புறச்சூழல் தினத்தை குறிக்கும் வகையில், இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, இயற்கையுடன் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தமது சிறுவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி அறிவை பகிர்ந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், தமது சூழல் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பளித்திருந்தது. அத்துடன், தலவத்துகொடையில் அமைந்துள்ள உயிரியல் பரம்பல் பூங்கா போன்ற நகர ஈரநிலங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வில், முன்னணி உயிரியல் பரம்பல் ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்ததுடன், ஈரநிலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் அன்யா ரத்நாயக்க மற்றும் அஷான் துடுகல ஆகியோர் விளக்கங்களை வழங்கியிருந்தனர். கொழும்பு மத்தியில் நடமாடிய காட்டுப்பூனைகளின் வீடியோ காட்சி சிறுவர்களை பரவசப்படுத்தியிருந்தது.

இந்த விளக்கங்களை தொடர்ந்து, பூங்காவினுள் வழிகாட்டல்களுடனான நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பவனியை, உயிரியல் பரம்பல் நிபுணர்கள் மேற்பார்வை செய்திருந்தனர். சிறுவர்கள் தமது பெற்றோருடன் இந்த நடையில் பங்கேற்றிருந்தனர். இதன் போது பெற்றோருக்கும் சிறுவர்களுக்கும் வெவ்வேறு விலங்கினங்கள் மற்றும் அவை தொடர்பான அறிவித்தல் பலகைகள் தொடர்பான விளக்கங்களை நிபுணர்கள் வழங்கியிருந்தனர். சிறுவர்களுக்கு இது விறுவிறுப்பூட்டும் அனுபவமாக அமைந்திருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தன்னார்வ செயற்பாட்டாளர்களும் இந்நடை நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .