2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெரடைஸ் டோய்ஸ் நிறுவனத்துக்கு ஜனாதிபதி விருது

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மென்ரக விளையாட்டுப் பொருள் உற்பத்தி நிறுவனமான பெரடைஸ் டோயிஸ் தனியார் நிறுவனம், விளையாட்டுப் பொருள் மற்றும் விளையாட்டுப் பிரிவில், மிக அதிக பெறுமதி சேர் ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருதை அண்மையில் பெற்றுள்ளது. 

இவ்விருது விழாவில், பெரடைஸ் டோய்ஸ் தனியார் நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளர் உதேனி, விநியோக வலையமைப்பு முகாமையாளர் சாமிந்த, ஏற்றுமதி இறக்குமதி முகாமையாளர் மாலக்க, மனித வள முகாமையாளர் ரொஷான், பொறித்தொகுதி முகாமையாளர் டில்ஷான், பொது முகாமையாளர் நீல், தொழிற்சாலை முகாமையாளர் உப்புல், உற்பத்தி முகாமையாளர் அத்தனாயக்க, நிதி முகாமையாளர் சிசிர, கணக்குப் பிரிவைச் சேர்ந்த பியுமிலா மற்றும் தரக்கட்டுப்பாட்டு முகாமையாளர் ஹன்ஷனி ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

ஜேர்மன் நாட்டின் பெயின் கூட்டு நிறுவனத்தின் பிரதான உற்பத்தி நிறுவனமாக பெரடைஸ் டோய்ஸ் தனியார் நிறுவனம் சர்வதேச சந்தைக்கு இலங்கையிலிருந்து மென்ரக விளையாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற முன்னணி நிறுவனமாகும். 

1982ஆம் ஆண்டில் ஆனோல்ட் ஹில்மர் பெயினால் ஆரம்பிக்கப்பட்ட பெகோ லங்கா 1995ஆம் ஆண்டில் பெரடைஸ் டோய்ஸ் என்ற பெயரில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இன்றளவில் எமது நாட்டின் பிரதான இரண்டு கைத்தொழிற்சாலைகளுடன் ஆர்னோல்ட் பெயின் மற்றும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான பொறியியலாளர் கலாநிதி அக்கீம் பெயின் ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ் பெரடைஸ் டோய்ஸ் வர்த்தக நாமத்தின் கீழ் தரமிக்க மென்ரக விளையாட்டுப் பொருட்களை உலகெங்கிலும் குழந்தைகளுக்காக உற்பத்தி செய்து வருகிறது. 

ஐரோப்பாவின் அதி நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் உயர்தர உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்ற பெரடைஸ் டோய்ஸ் நிறுவனமானது, Made in Sri Lanka நாமத்தை உலகறியச் செய்யும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் அனைவரித்தினதும் அர்ப்பணிப்பு காரணமாக 60 ஊழியர்களுடனும் 45 தையல் இயந்திரங்களுடனும் ஆரம்பிக்கப்பட்டு இன்றளவில் பல இலட்சம் டொலர்களை முதலீடு செய்து கட்டியெழுப்பப்பட்ட அதி நவீன கைத்தொழிற்சாலைகளையும் சர்வதேச சந்தையை வென்றெடுத்த வர்த்தக நாமங்கள் பலவற்றையும் பெரடைஸ் டோய்ஸ் நிறுவனம் தன் வசம் கொண்டுள்ளது. குப்பைகள் இல்லாத சூழல் எண்ணக்கருவை மிகச் சிறப்பாக செயற்படுத்துகின்ற பெரடைஸ் டோய்ஸ் நிறுவனம், கழிவு நீரையும் மீள்சுழற்சிக்குட்படுத்தி நிறுவனத்துக்குள்ளேயே அதை மீள பயன்படுத்துகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X