2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹரகமயில் சதாஹரித அக்ரி பார்ம்ஸ் நிறுவனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சதாஹரித அக்ரி பார்ம்ஸ் அன்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ் பிரைவட் லிமிட்டெட் (SAFE), தனது அலுவலகத்தை மஹரகமைக்கு அண்மையில் இடமாற்றியிருந்தது. இதனூடாக, நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கவும், தனது பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரத்தை முன்னெடுப்பதையும், உறுதி செய்துள்ளது. 

இலங்கையில், வணிக வனாந்தரச் செய்கையை கடந்த 15 வருடகாலமாக முன்னெடுத்து வரும் சதாஹரித, மரங்கள் வளர்ப்பு மூலமாக, சூழல் பாதுகாப்புக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கி வருகிறது. நிறுவனத்துடன் 26,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதுடன், வனாந்தரச் செய்கையில், இவர்கள் தமது முதலீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சதாஹரித அக்ரி பார்ம்ஸ் அன்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ் (SAFE) ஏற்றுமதி தொடர்பில் கவனம் செலுத்தி வருவதுடன், 2011இல், முதல் தொகுதியை ஏற்றுமதி செய்ததிலிருந்து, தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை அயாராது முன்னெடுத்த வண்ணமுள்ளது. பதப்படுத்தப்பட்ட, உலர்த்தப்பட்ட பழங்கள், மரக்கறிகளை ஏற்றுமதி செய்யும் செயற்பாடுகளை, நிறுவனம் மேற்கொள்கிறது. தேங்காய், தும்பு உற்பத்தி பொருட்கள், வாசனைத்திரவியங்கள், தேயிலை, சமையற்கலை நிபுணர்களுக்கான ஆடைகள், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் போன்றவற்றையும் ஏற்றுமதி செய்கிறது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில், மாலைதீவுகள், சீஷெல்ஸ், மொரிஷியஸ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் காணப்படும் உலகப்புகழ்பெற்ற ஹோட்டல்கள், சுப்பர்மார்க்கெட்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உள்ளடங்கியுள்ளன. இலங்கை தேசிய ஏற்றுமதி சம்மேளனத்தின் அங்கத்துவத்தை நிறுவனம் பெற்றுள்ளதுடன், HACCP,  ISO தரச்சான்றுகளையும் பெற்றுள்ளது. 

“ரொபின்சன் க்ளப், ஃபோர் சீசன்ஸ், அனந்தரா, மெரியட் ரிசோர்ட் ஹொடெல்ஸ் போன்ற புகழ்பெற்ற விருந்தோம்பல் தொடர்களுக்கு, நாம் சேவைகளை வழங்கி வருகிறோம்”என, சதாஹரித குழுமத்தின் தலைவர் சதீஷ் நவரட்ன தெரிவித்தார். “பண்ணைகளிலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு விவசாயப் பொருட்களைக் கொண்டுச் செல்கையில், எமது தகைமை வாய்ந்த அணியினர்,  விவசாய நிபுணர்களின் அர்ப்பணிப்பானச் செயற்பாடுகளினூடாகக் கடுமையான தரக்கட்டுப்பாடுகள், சர்வதேச தரங்களுக்கமையப் பேணப்படுவதுடன், சுகாதாரம், போஷாக்கு போன்றனவும், உறுதி செய்யப்படுகின்றன” ​என மேலும் குறிப்பிட்டார். 

இலங்கையில் காணப்படும் பழங்கள்,  மரக்கறி ஏற்றுமதியில், முன்னணியில் திகழும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக SAFE திகழ்கிறது. நிறுவனத்தினால், ஏற்றுமதி செய்யப்படும் விளைச்சல்கள், துறைசார் நிபுணர்களின் பங்காண்மையுடன் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. விளைச்சலின் பின்னர் 24 மணி நேரத்துக்குள், அவை ஏற்றுமதி செய்யப்படும் வகையில் அமைந்துள்ளன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .