2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

றொன் கப்மன் இலங்கை விஜயம்

Editorial   / 2017 ஜூன் 16 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைக் கல்வியில் கலாசார பரிணாமத்தை ஏற்படுத்தி, புதுயுகம் படைத்து, சந்தைப்படுத்தலில் புரட்சியை ஏற்படுத்திய றொன் கப்மன், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) அழைப்பை ஏற்று, எதிர்வரும் ஜூலை மாதம் 18, 19ஆம் திகதிகளில் இலங்கையில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார்.

சேவைகள் தொடர்பான கல்வியில் உலகில் முன்னணி வகித்து வரும் இவர், ‘சேவைகள் குரு’ எனவும் அழைக்கப்படுகிறார். உலக மட்டத்தில், சேவைகள் ஆலோசகராகவும் பேச்சாளராகவும் கல்விமானாகவும் சிந்தனைமிக்க தலைவராகவும் வாடிக்கையாளர் சேவை பற்றி விளக்கமளிப்பவராகவும் பெற்றுள்ள அறிவை இந்த நாட்களில் அவர் எம்முடன் பகிர்ந்துகொள்வார்.

றொன் கப்மன், ‘சேவைத் தலைமைத்துவம் - தவிர்க்க முடியாதது’ என்ற தலைப்பில் ஜூலை 18ஆம் திகதி வோட்டர்ஸ் எஜ்ஜில் பொதுமக்களுக்கான கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறார். ஜூலை 19ஆம் திகதி, சினமன்ட் கிரான்ட் ஹொட்டேலில் நடைபெறும், நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடனான காலைப்போசன மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு, ‘சேவை மூலம் தலைமை தாங்குதல் - கூர்ந்து நோக்கும் கலாசாரம் : C- Suite மூலம் தலைசிறந்த சேவையை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இருக்கிறார். ஊக்கமளிக்கும், இலகுவான விளக்கங்கள் மற்றும் தொடர்பாடல்கள் மூலம், சேவை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் போன்ற துறைகளில் ஆர்வமுள்ளோருக்கு,  விருப்பத்தையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்துவதில் அவர் தேர்ச்சி பெற்றவர். பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்குரிய கூட்டத்தில் கப்மன் தலைசிறந்த சேவையை C- Suite மூலம் எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்கவுள்ளார்.

மேலும், சேவையின் மூலம் மிகச்சிறந்த போட்டியை வெற்றிகொள்ளும், நிலையான, வலுவான அடைவுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் தெளிவுபடுத்துவார். இந்த விளக்கங்கள் மூலம் உலகின் அனைத்துக் கண்டங்களிலும் வர்த்தகத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவரால் முடிந்துள்ளது.   ‘வாடிக்கையாளர்களே எமது அரசர்களாவர்’ என்ற தொனிப்பொருளை வெளிப்படுத்தும் அதேவேளை, அதற்கு வித்தியாசமான விளக்கத்தையும், அதன் மூலம் அடைந்து கொள்ளக்கூடிய, போட்டியை வெல்லும் விசேட அம்சங்களையும் இந்த விஜயத்தின் போது எடுத்துரைப்பார்.

ஒவ்வோர் ஊழியருக்கும் தான் புரியும் தொழிலில் மன நிறைவை ஏற்படுத்தும் கலாசாரத்தையும், சேவையின் தரத்தை உயர்த்துவதன் மூலம் ஆர்வம் காட்டுவோரின் மகிழ்ச்சியை எவ்வாறு அதிகரிக்கச் செய்வது என்பது பற்றியும், சேவை அடிப்படையில் கொள்கை விளக்கம் காணுதல் என்ற பொதுமக்களுடனான நிகழ்வில் கப்மன் கருத்துகளைப் பரிமாறவுள்ளார். வாடிக்கையாளரின் சேவைத் தரத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவர் உரையாற்றுவார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .