2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வர்த்தக சமூக நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Future Automobiles (Pvt) நிறுவனத்தால், இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு வருகின்ற Ford Motor நிறுவனம், JEN (ஜப்பானிய அவசரகால அரசசார்பற்ற நிறுவனம்) உடன் இணைந்து, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்,  மூன்று செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. 

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள், தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவுவதில்,  இச்செயற்றிட்டங்கள் மூலமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், விவசாயத்தின் மூலமாக, தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்பி, குறிப்பாக அதன் மூலமாக, வருடம் முழுவதும் வருமானத்தை ஈட்டும் வழிமுறைகளுக்கு, இதன் கீழ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. Ford நிறுவனத்தின் Global Giving நிகழ்ச்சித்திட்டத்தின் மானியத்துடன் இச்செயற்றிட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. Global Giving மற்றும் Ford ஆகியவற்றுக்கு இடையிலான பங்குடமையானது, 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், 2014ஆம் ஆண்டில் Ethisphere இனால், உலகில் தொழில் தர்மத்தை வெகுவாகப் பேணிவரும் நிறுவனங்களுள் ஒன்று என்ற இனங்காணல் அங்கிகாரத்தையும் சம்பாதித்திருந்தது. தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும், இந்த இனங்காணல் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவிலுள்ள நிறுவன சமூகப் பொறுப்புணர்வு சஞ்சிகைகளில் ஒன்றால் பெயரிடப்பட்ட மிகச் சிறந்த 100 வர்த்தக நிறுவனங்களின் பட்டியலிலும்,  Ford நிறுவனம் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூன்று செயற்றிட்டங்களில்,  முதலாவதாக “Ford Operation Better World” என்ற தலைப்பிலான செயற்றிட்டத்தில், விவசாய நீர்ப்பாசனக் கிணறுகளின் நிர்மாணம் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திப் பணிகள் அதில் உள்ளடங்கியிருந்தன. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 55 வீடுகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ள JEN, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆனைவிழுந்தான் கிராம சேவகர் பிரிவிலும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தம்பகாமம் கிராமசேவகர் பிரிவிலும், மொத்தமாக 27 விவசாய நீர்ப்பாசன கிணறுகளை நிர்மாணித்துள்ளது. கிணறுகளை நிர்மாணித்த பின்னர், விதைகள், கன்றுகள், விவசாய உபகரணங்கள் மற்றும் நீர்ப்பம்புகள் பயனாளிகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டு, நீண்ட காலப்பயிர்கள், மரக்கறி மற்றும் பழ வகை செய்கைகளுடன் விவசாய நடவடிக்கைகளை அவர்கள் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளனர். மேலும், இச்செய‌்றிட்டத்தின் கீழ்,  கிளிநொச்சியில் தம்பகாமம்,  ஆனைவிழுந்தான் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், முல்லைத்தீவிலுள்ள தாண்டவன், அம்பகாமம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், சனசமூக நிலையங்களில், 4 மழைநீர் சேமிப்பு தாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

Ford நிறுவனத்தின் Global Month of Caring நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இரண்டாவது செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், தம்பகாமம் கிராமசேவகர் பிரிவில், சனசமூக மண்டபம் ஒன்றின் நிர்மாணமும் அதில் உள்ளடங்கியுள்ளது. இந்த சனசமூக மண்டபம், அங்குள்ள மாதர் ஒன்றியம் மற்றும் JEN இன் விவசாய கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றால் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை தயாரிப்பதற்கு அரைக்கும் ஆலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X