2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸின் பிணைப்புத் திட்டம்

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸின் ‘வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பிணைப்பு’ திட்டம், நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அமைந்துள்ளது. 

வாழ்க்கையில் நபர் ஒருவர், தனது வாழ்க்கையை மாற்றியமைக்கும் மற்றும் சவால்கள் நிறைந்த அனுபவங்கள் பலதைப் பெற்றுக் கொள்வார். இவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு அவர்கள் உறுதியான பிணைப்புகளை கொண்டிருக்க வேண்டும்.   

வாழ்க்கையை மாற்றும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ‘வாழ்க்கையை மாற்றும் பிணைப்பு’ இரண்டாம் கட்டத்தை ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்துள்ளது.

நாட்டின் நான்கு முனைகளில் தனது பிரத்தியேக நிதி ஆலோசகர்களுடன் இந்த திட்டத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் ஆரம்பித்துள்ளது. கொழும்பு, பருத்தித்துறை, சங்கமன் கந்தை (அம்பாறை) மற்றும் தெய்வேந்திர முனை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் வாழ்க்கையை மாற்றும் பிணைப்பை சென்றடையும் வகையில், எமது ஆலோசகர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  

வெற்றிகரமான பிணைப்பை ஏற்படுத்துவது என்பது ஒருபோதும் இலகுவான காரியமல்ல. அதை தொடர்ந்து பேணுவது என்பது மிகவும் சவால் நிறைந்தது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் மனதில் உறுதியாக இடம்பிடித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், நாடு முழுவதிலும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் சவாலை முன்னெடுக்கிறது.  

யூனியன் அஷ்யூரன்ஸ் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி கசுன் சமீர கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘வாழ்க்கையை மாற்றும் பிணைப்பு’ நிகழ்ச்சிக்கு இந்நாட்டு மக்களிடமிருந்து பெருமளவு வரவேற்புக் கிடைத்திருந்தது. பாரம்பரிய ஆயுள் காப்புறுதி நோக்கமைவிலிருந்து விடுபட்டு, முன்நோக்கிப் பயணிப்பது என்பது மிகவும் சவால்கள் நிறைந்த காரியமாக அமைந்துள்ளது. இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறைக்கு புதிய அத்தியாயத்தை வழங்க எம்மால் முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் அனைத்து மக்களையும் இந்தப் பிணைப்பைச் சென்றடையச் செய்வது எமது கடமையாகும். நாம் அனைவரும் இந்தப் பயணத்தை முன்னெடுக்கையில், எமது பிரத்தியேக நிதி ஆலோசகர்களுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்பை ஏற்படுத்த முன்வருமாறு அனைவரையும் அழைக்கிறேன். எமது அணி, எமது பிரத்தியேக நிதி ஆலோசகர்களுடன் இணைந்து, உங்களது வாழ்க்கையை மாற்றும் பிணைப்புடன் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கிக் கொள்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்க நாடு முழுவதும் பயணிக்கவுள்ளனர்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .