2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு டயலொக் நிவாரணம்

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, ‘உங்கள் மறுமலர்ச்சிக்கு நாம்’ (செனேஹே சியபத 2018/2019) எனும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 15,100 பாடசாலை மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. விநியோகப் பணிகளின் ஆரம்பக் கட்டமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 1,140 மாணவர்களுக்கு 2019 ஜனவரி ஏழாம் திகதி, பாடசாலை பைகளும் பாடசாலை உபகரணங்களும் (தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் 838 மாணவர்களுக்கும், சுதந்திரபுரம் மகா வித்தியாலயத்தில் 302 மாணவர்களுக்கும்) அனைத்து பங்குதாரர்களின் உயர் அதிகாரிகளின் முன்நிலையில் வழங்கப்பட்டன. 

டயலொக் வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலம் நன்கொடை வழங்க DON என டைப் செய்து, 7700 க்கு எஸ்எம்எஸ் செய்தால், ஒவ்வொரு ரூபாய் 50 நன்கொடையுடனும் டயலொக் நிறுவனம் ரூபாய் 100ஐ இணைத்து, 150 ரூபாயாக வௌ்ள நிவாரணத்துக்கு வழங்கும். வாடிக்கையாளர்கள் மேலும் Star Points இனை நன்கொடையாக வழங்க #141*5*7# என டைப் செய்து, அல்லது eZ cash ஊடாக நன்கொடை வழங்க eZ cash mobile App இனை பயன்படுத்துங்கள். அல்லது #11*6#  க்கு டயல் செய்து,PIN இலக்கத்தைப் பதிவு செய்து, இலக்கம் ஒன்றைப் பதிவு செய்து DON எனக் குறிப்பிட்டு, கணக்கு இலக்கமாக 1234 ஐ  பதிவு செய்து, நீங்கள் நன்கொடை வழங்க விரும்பும் தொகையைக் குறிப்பிட்டு உறுதிப்படுத்துங்கள். எவ்வளவு தொகையானாலும் நீங்கள் நன்கொடையாக வழங்க முடியும்.

Etisalat மற்றும் Hutch வாடிக்கையாளர்களும் eZ Cash ஊடாக நன்கொடை வழங்க முடியும். இவற்றின் ஊடாக நீங்கள் வழங்கும் தொகையை, டயலொக் மூன்று மடங்காக நிவாரணத்துக்கு வழங்கும். மேலும் வௌிநாடுகளில் வாழும் மக்கள், தங்களின் உறவினர்களுக்கு உதவிக் கரம் நீட்ட, eZ Cash ஊடாக www.worldremit.com க்குச் சென்று நன்கொடை வழங்கும் தொகையைக் குறிப்பிட்டு உறுதிப்படுத்துங்கள். நிதி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் pricewaterhouseCoopers நிறுவனம் ஆய்வு செய்யும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .