2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹேகார்ப் 2017/18 இல் சிறந்த நிதிப் பெறுபேறுகள்

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஹேகார்ப் பீ.எல்.சீ, 2017/18 நிதியாண்டில் 15.5 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பதிவு செய்துள்ள அதேவேளை, வரிக்கு முந்திய இலாபமாக 926 மில்லியன் ரூபாயையும், வரிக்குப் பிந்திய இலாபமாக 774 மில்லியன் ரூபாயையும் பெற்றுள்ளது. நிறுவனத்தின் பங்குதாரர்களின் பங்கு ஒன்றுக்கான வருமானம் ரூ. 22.63 ஆகும்.  

ஹேகார்ப் பீ.எல்.சீ (Haycarb PLC) மற்றும் அதன் தலைமை நிறுவனமான ஹேலீஸ் பீ.எல்.சீ  என்பவற்றின் தலைவரான மொஹான் பண்டிதகே, “மூலப்பொருட்களுக்கான விநியோக சங்கிலியில் முக்கிய சவால்கள் இருந்தபோதிலும், உயர்மட்ட வரிசையில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியும், தென்னஞ்சிரட்டையை அடிப்படையாகக் கொண்ட கார்பன் தொழிற்துறையில் அதன் தலைமைத்துவமும், ஹேகார்பின் வலிமையை நிரூபிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவான பியுரிடாஸ் பிரைவட் லிமிடட்டின் (Puritas (Pvt.) Ltd) குறிப்பிடத்தக்க வளர்ச்சியும், குழுவின் பெறுபேறுகளுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹேகார்ப் பீ.எல்.சீ இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜித காரியவசன், “நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் பாதகமான காலநிலைகள் காரணமாக இலங்கை, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தென்னஞ்சிரட்டை கரிக்கு நிலவிய பற்றாக்குறையும், அதன் விலைகளில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பும், நிறுவனத்தின் கார்பன் தொழிற்துறையில் கணிசமான அழுத்தங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, நடப்பு ஆண்டில் கார்பன் வர்த்தகம் குறைந்தளவான இலாபத்தையே பெற்றுத்தந்தது. மற்றைய நாடுகளில் மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக விலை உயர்ந்திருந்த அதேநேரம், கடந்த இரு ஆண்டுகளாக மூலப்பொருட்களுக்குப் பற்றாக்குறை இருந்தாலும் கூட, மறுபுறம் இறுதி காலாண்டில் இந்தோனேஷியாவில் மூலப்பொருட்களின் இருப்புநிலையால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது” என்று தெரிவித்தார்.

“இந்த ஆண்டு காலப்பகுதியில் முக்கிய விடயம் யாதெனில், நீண்டகால வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உற்பத்தித் தேவைகளை உறுதி செய்வதற்காக, பெரும்பான்மையான மூலப்பொருட்களின் விலையதிகரிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு ஹேகார்ப் நிர்ப்பந்திக்கப்பட்டது. இது அதன் உலகளாவிய விநியோக வலையமைப்பிற்கு, வாடிக்கையாளர்களுக்கு விலையுயர்வை சராசரிப்படுத்துவதற்கு வழிவகுத்ததோடு, விநியோக சங்கிலியின் குழப்பநிலையைக் குறைக்கவும் உதவியது” என்று காரியவசன் மேலும் விவரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .