2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேள்வி அதிகரித்துள்ள மல்வானை றம்புட்டான்

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு றம்புட்டான் விளைச்சலானது வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக றம்புட்டான் செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனாலேயே மல்வானை றம்புட்டானுக்கான கேள்வி சந்தையில் அதிகரித்துள்ளதைக் காணமுடிகிறது.

தற்போது சந்தையில் மல்வானை றம்புட்டான் ஒன்று ஆறு ரூபாவுக்கு விற்பனையாகும் அதேவேளை, மலேசியன் றம்புட்டான் ஒன்று ஐந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. றம்புட்டானுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே இந்நிலைக்கு காரணமாகும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ற்ம்புட்டான் ஏற்றுமதியாளர்கள், கடந்த காலங்களில் கண்டிராத அளவுக்கு இம்முறை றம்புட்டான்கள் அதிகம் விலையேறியுள்ளதாக கூறுகின்றனர். அத்துடன், நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வடக்கு கிழக்கு பகுதிகளுக்கும் பெருமளவிலான றம்புட்டான்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, டுபாய், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளுக்கும் கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிஸ்ஸர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் றம்புட்டான்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .