2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு பிரித்தானியா மேலும் உதவிகளை வழங்கும் - இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர்மார்க் கோடிங்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொருளாதாரத்தில் தற்போது முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டு வரும் நிலையில்,  பிரித்தானியாவினால் இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய வர்த்தகசபையின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, பிரித்தானியாவின் இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர் மார்க் கோடிங் இதனைக் கூறினார்.

ஏற்கனவே இலங்கையின் வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் அபிவிருத்தி கலந்த பல்வேறு உதவிகளை வழங்க முடியும் எனவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த அபிவிருத்தி சார்ந்த உதவிகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை அதிகரிக்க உதவும் எனவும் மார்க் கோடிங் குறிப்பிட்டார். 

இதேவேளை, யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வர்த்தக சபை, இலங்கையில் மேலும் பல வர்த்தக முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .