2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறந்த கிராமிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டத்தை முன்னெடுத்துள்ள ஜனசக்தி

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கிராமிய இளைஞர்களை ஊக்குவிக்கும் ஓர் அங்கமாக, ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக பின்தங்கிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த வருடம் 400M மற்றும் 400M தடை தாண்டல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பகமுக மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதுடைய டி.யாமினி துலான்ஜலி இத் திட்டத்துடன் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.

ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது இத் திட்டத்திற்கான இளம் வீரர்களை ஜனசக்தியின் சிறந்த கிராமிய திறன் கணிப்பீட்டு திட்டம் மற்றும் கிடைக்கப்பெற்ற பல்வேறு விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுத்து வருகிறது.

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டிருந்த மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் சுகத் திலகரத்ன தாம் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக உருவாவதற்காக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் பயிற்சிகள் தொடர்பில் ஊக்குமளிக்கும் வகையில் உரை ஒன்றை நிகழ்த்தினார். நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு வழங்குவதில் ஜனசக்தியின் மிகச்சிறந்த செயற்பாடுகள் குறித்து தமது நன்றியை தெரிவித்திருந்தார். மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் சுனிமல் ரூபசிங்க அவர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்த அனுசரணை திட்டத்தில் சிறப்பான செயல்திறனை அடையாளப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை திட்டத்துடன், மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. மேலும் இலங்கை சார்பாக போட்டியிட விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேவையான நிதி வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, வீரர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் ஊக்குவிப்பு திட்டங்கள் போன்றனவும் ஜனசக்தியால் வழங்கப்படுகிறது. ஜனசக்தி நிறுவனமானது விளையாட்டு வீரர்களுக்கு தமது விளையாட்டு திறமையை ஊக்குவிப்பதற்கான உதவிகளை வழங்குவதுடன், முழுநேர ஊழியர்களாகவும் அவர்களை பணிக்கமர்த்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஏழு மாணவ விளையாட்டு வீரர்களும், ஊழியர் பிரிவில் ஐவரும் அனுசரணை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இரு டெனிஸ் வீரர்கள் அனுசரணையை பெற்று வருகின்றனர்.

இந்த மெய்வல்லுநர்கள் கடந்த ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான சம்பியன்ஷிப் போட்டிகளில் தத்தமது பிரிவுகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். கனிஷ்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் சுமண பெண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்ஷனி வத்சலா 100அ தடை தாண்டல் போட்டியில் 1ஆவது இடத்தையும், 400அ தடை தாண்டல் போட்டியில் 2ஆவது இடத்தையும் வென்றார். சீவளி மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதான அகில ரவிசங்க சேர்.ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 100அ மற்றும் 110அ போட்டிகள் இரண்டிலும் முதலிடத்தை சுவீகரித்து புதிய சாதனையை பதிவு செய்திருந்தார். இம் மாணவரே நாடாளவிய ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடந்து முடிந்த கனிஷ்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் 110M  தடைதாண்டல் போட்டியை வெறும் 14.4 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

'ஜனசக்தியுடனான அனுசரணையின் மூன்றாவது ஆண்டாக இது அமைந்துள்ளது. எனது இலக்குகளை எய்துவதற்கு நிதி வசதிகளை வழங்கி உதவிய ஜனசக்திக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' என அகில தெரிவித்தார்.

'இலங்கையில் பல்வேறு விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டுகளில் மிகச்சிறந்த செயல்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்தவதற்கான உதவிகளை வழங்கி இளைஞர்களை ஜனசக்தி மேம்படுத்தி வருகின்றது' என இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதம செயல்பாட்டு அதிகாரி தயாளினி அபேகுணவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .