2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுவதேஷியினால் கிரி விஹாரை, கதிர்காம ஆலயமும் ஒளியூட்டப்பட்டது

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரபல்யமான இரு வாசஸ்தலங்களான கதிர்காமம் கிரி விஹாரை மற்றும் முருகன் ஆலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற 2015 எசல திருவிழா கொண்டாட்டங்களின் போது, இரு ஆலயங்களையும் சுவதேஷி நிறுவனம் ஒளியூட்டியிருந்தது. தொடர்ச்சியாக 14 ஆவது ஆண்டாக இந்த ஒளியூட்டல் நிகழ்வை சுவதேஷி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயுர்வேத தயாரிப்புகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம், இம்முறை இந்த ஒளியூட்டும் நிகழ்வுக்கு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' என பெயரிட்டுள்ளது.

ஜுலை 17 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இந்த நிகழ்வுகள் ஜுலை 31 ஆம் திகதி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான 14 ஆவது வருடமாக சுவதேஷி நிறுவனம் இந்த ஒளியூட்டும் நிகழ்வை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஒளியூட்டல் பற்றி சுவதேஷி நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருமதி. அமரி விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

மஹாவம்சத்துக்கு அமைவாக மஹாநாக எனும் அரசனால் கிரிவிஹாரை கட்டப்பட்டது. இது புத்த பெருமான் இலங்கைக்கு தனது மூன்றாவது விஜயத்தை மேற்கொண்டு கதிர்காம கிரி வனப்பகுதிக்கு சென்று தர்ம போதனைகள் வழங்கியமையை நினைவு கூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கதிர்காம ஆலயம் துட்டகைமுனு மன்னனால் இலங்கையின் தேசிய இறைமையை பாதுகாத்திடும் வகையில் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. கதிர்காம கந்தனை இலங்கையர்கள் மட்டுமல்லாமல், உலகளாவிய ரீதியில் வௌ;வேறு மதங்களை சேர்ந்த பக்தர்கள் வழிபடுவது விசேட அம்சமாக அமைந்துள்ளது.

2013 இல், புத்த பெருமானின் புனித தந்தம் பேணப்பட்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தம்பதெனிய ரஜமஹா விஹாரையின் 'ஸ்ரீ தலதா மாளிகை' 2013 இல், சுவதேஷி நிறுவனத்தின் தலைமை அதிகாரியான திருமதி. அமரி விஜேவர்தன மூலமாக புனரமைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1927ஆம் ஆண்டு களனி விஹாரையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்திருந்த ஹெலெனா விஜேவர்தன லமாதெனி அவர்களின் பூட்டப்பிள்ளை திருமதி. அமரி விஜேவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையை பாதுகாத்திடும் நாற்திசை தெய்வங்களான களனி (விபூஷண கடவுள்), கதிர்காமம் (கதிர்காமக் கந்தன்), இரத்தினபுரி(புத்தர்), தெவிநுவர(விஷ்ணு கடவுள்) ஆகிய ஆலயங்களையும் திருவிழாக்காலங்களில் ஒளியூட்டும் நடவடிக்கையை சுவதேஷி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பேர்ள்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃபியும் மற்றும் ஆஃவ்ட்டர் ஷேவ், சுவதேஷி ஷவர் ஜெல் மற்றும் சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லிட்டில் ப்ரின்சஸ் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. முன்னணி ஆயுர்வேத சோப் வகையான கோஹோம்ப ஹேர்பல் சோப் வகையை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிப்பதுடன், பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் வகையையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.

கம்பனியின் மூலமாக உயர்தர மூலிகை தயாரிப்பாக 'கொஹோம்ப ஹேர்பல்' மற்றும் 'ராணி சந்தன சோப்' போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .