2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2017இல் நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 1.63 பில். அமெ. டொலர்

Editorial   / 2018 ஜனவரி 31 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டில் நாட்டுக்கு கிடைத்திருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த 802 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இந்தத் தொகை இரட்டிப்பாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

2014இல் பெறப்பட்டிருந்த 1.61 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பதை விட கடந்த ஆண்டில் இந்தத் தொகை அதிகரித்திருந்தமை இலங்கையின் வரலாற்றில் இதுவரை பதிவாகியிருந்த மிகவும் உயர்ந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட உற்பத்தித் துறை, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் அடங்கலான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் பெருமளவு முதலீடுகள் பதிவாகியிருந்தன.  

பெருமளவான முதலீடுகளை சீனா மேற்கொண்டிருந்ததுடன், ஹொங் கொங், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் குறிப்பிடத்தக்களவு முதலீடுகளை கடந்த ஆண்டில் இலங்கையில் மேற்கொண்டிருந்தன.  

மில்லெனிய, பிங்கிரிய, வெலிகம மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளில் புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களை உருவாக்குவது தொடர்பில் முதலீட்டு சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டின் பின்னர் உருவாக்கப்படும் பிரத்தியேகமான முதலீட்டு சபை வலயங்களாக இவை அமைந்திருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .