2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

4G Phone அறிமுகத்துடன் 50% Cash Back சலுகை வழங்கும் டயலொக்

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, crystal clear குரல் அழைப்பையும் மற்றும் வீடியோ பொழுதுபோக்கையும் கொண்ட, இலங்கையில் மிக மலிவான விலையில் 4G ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.   

இதை Wi-Fi hotspot களாகப் பயன்படுத்தலாம். legacy cellular அல்லது ஏனைய Wi-Fi சார்ந்த சாதனங்களினூடாக 4G வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். இந்த ஃபோனானது இந்தியாவில் உள்ள முன்னணி நுகர்வோர் மின்னணு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது.   

இது நேர்த்தியான கருப்பு நிற வடிவமைப்புடன் கூடிய அலைபேசியாகும். 1.0 GHz dual core processor மற்றும் 2.4-inch TFT டிஸ்பிளே, மற்றும் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய Keyboard இனையும் கொண்டுள்ளது. அத்துடன் 512 MB RAM மற்றும் 4G ROM, 4.4.2Android KitKat version உள்ளடங்களாக, Dual Camera, GPS மற்றும் Wi-Fi யும் காணப்படுகின்றன.  

VoLTE (Voice over LTE)தொழில்நுட்பத்துடன் கூடிய crystal-clear குரல் அழைப்புகளுக்கான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதுடன், Facebook, WhatsApp மற்றும் YouTube போன்றவற்றையும் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசிக்கு ஒரு வருட உத்தரவாதமும் வழங்கப்படுகின்றது.   

இந்த அறிமுக நிகழ்வின் போது, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி ரெய்னர் டெய்ட்ஸ்மன் உரையாற்றுகையில், “நுண்ணறிவு மற்றும் அதிவேக வலையமைப்பில் சமீபத்திய 4G தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனுபவிக்க ஒவ்வோர் இலங்கையருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதன் மூலமாக, நுணுக்கமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் அதன் பார்வையை டயலொக் உருவாக்கியுள்ளது.   

“YouTube மற்றும் சமூக வலைத்தளங்களின் தரவுச் சேவைகளை அணுகுவதற்கும் தௌ்ளத் தெளிவான குரல் அழைப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த மிகக்குறைந்த விலையில் காணப்படும் 4G தொலைபேசி வழங்குகின்றது.  

 “மேலும், நாங்கள் புதுமையாக 50% Cash Back சலுகையையும் வழங்குகின்றோம். இதன் மூலம் எங்கள் வலையமைப்பில் அலைபேசியின் விசுவாசமான ஊக்கமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம்.   

“இந்த மிக்குறைந்த விலையைக் கொண்ட, 4G அலைபேசி ரூபாய் 4,990 மட்டுமே. மற்றும் இரண்டு வருட காலப்பகுதியில் குறைந்த பட்ச பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம், தொடர்ச்சியாக இணைப்பைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% Cash Back சலுகையும் (ரூபாய் 2,499) வழங்கப்படும்.   


இந்தச் சலுகைகள், ஜூலை 31ஆம் திகதி வரை மட்டும் அல்லது கையிருப்பு உள்ளவரை மட்டுமே செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் இந்த அலைபேசியை நாடளாவிய ரீதியில் உள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது இலங்கையின் முன்னணி e-commerce தளமான WWW.lk இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்ய முடியும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .