2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ACCA விருதுகளில் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு

Editorial   / 2019 ஜூன் 10 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ACCA ஸ்ரீ லங்கா நிலைபேறாண்மை விருதுகள் 2018இல், நிதிச் சேவைகள்,  காப்புறுதி பிரிவில் யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு 2019 மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றது.

ACCA இனால் 15ஆவது வருடமாக, தொடர்ச்சியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 11 ஆவது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிலைபேறான வியாபார செயற்பாடுகளுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது.

நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்காக, சகல பங்காளர்களுடனும் உறுதியான, பெறுமதி வாய்ந்த உறவுகளை பேணுவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு தீர்வுகளை வழங்குவதுடன், அதற்காக உலகத் தரம் வாய்ந்த சேவைத் தரங்களை கொண்டுள்ளதுடன், ஊழியர் விருத்தியில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், நிபுணத்துவத்தையும் ஊக்குவித்து, வியாபார பங்காளர்களுடன் உறுதியான உறவுகளை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகின்றது. சமூகங்களின் நலனில் பங்களிப்பு வழங்குவதுடன், சூழலில் நிறுவனத்தின் தாக்கத்தை உறுதி செய்யும் வகையில் நிலைபேறான செயன்முறைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதி செய்கின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய விருதை பெற்றுக் கொள்வதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். தொடர்ந்தும் நிலைபேறான வியாபார செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அணியினருக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும் அமைந்திருந்தது” என்றார்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காண்மைகளை ஏற்படுத்துவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துவதில் தனது முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .