2024 மார்ச் 28, வியாழக்கிழமை

AIA 100 வருட பயணம் வோக் போ லைஃவ்

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் காப்புறுதி வழங்குநரான AIA, இலங்கை இருதயச் சங்கத்துக்கு (SLHA) உதவும் முகமாக, AIA வோக் போ லைஃவ் (AIA Walk for Life) அறக்கொடை நடை பவனிக்கு அனைவரையும் அன்புடன் அழைத்துள்ளது.

நிறுவனத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடை பவனியில் இணையும் ஒவ்வொருவர் சார்பாகவும் ரூ.1000ஐ SLHA க்கு AIA நன்கொடையாக வழங்கும்.  

AIAஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் தொற்றா நோய்கள் 75% க்கும் அதிகமான மரணத்துக்குப் பொறுப்பான, உண்மையான பிரச்சினையாக இருந்து வருகின்றது. அதாவது, உலகளாவிய ரீதியில் 63% இலும் அதிகமானதாகவே இது காணப்படுகின்றது. சமூகத்தின் சுகாதார, ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனமாக எங்களுடைய நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஒரு பெறுமதியான காரணத்துடன் இணைக்கவே நாங்கள் விரும்புகின்றோம். இலங்கையில் நிகழும் மொத்த மரணத்தில் 25% மரணங்கள் முடியுருநாடி இதய நோயினாலேயே ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது (WHO, 2017). மேலும், இதய நோயால் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் எங்களில் பெரும்பாலான வர்களுக்குத் தெரியும். ஆகவே, நோயாளர்களுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்குவதற்காக SLHAஇன் ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கும் சந்தர்ப்பத்தில் இதய நோய்களைத் தடுப்பது பற்றிய பொதுவான விழிப்புணர்வை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிக்கு நாங்கள் உதவுவது மிகவும் பொருத்தமானதாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X