2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

Airtel - Google கைகோர்ப்பு

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் முதற்தடவையாக வாடிக்கையாளர்கள் Google Play இன் துணையுடன் தமது மீள்நிரப்பல்கள் மூலமாக (recharge அல்லது reload) apps மற்றும் ஏனைய டிஜிட்டல் உள்ளடக்கங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. AirPay என்ற பெயரிலான இந்த Direct Carrier Billing சேவையின் மூலமாக முற்கொடுப்பனவுத்திட்ட வாடிக்கையாளர்கள் தமது மீதமுள்ள தொகையில் கொள்வனவுத் தொகைகளை கழித்துக் கொள்ள முடிவதுடன், பிற்கொடுப்பனவுத்திட்ட வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கொள்வனவுகள் அவர்களுடைய மாதாந்த அலைபேசிக் கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படும். 

இலங்கையில் குறிப்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் கடனட்டைகளின் புழக்கம் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் உள்ளமையைக் கருதுகையில், Google Play உடன் Airtel சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்தக் கூட்டிணைப்பு, தற்சமயம் கடனட்டை அல்லது டெபிட் அட்டையைக் கொண்டிராதவர்களுக்கு இணையத்தின் மூலமாக கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு ஒரு மகத்தான மாற்றுவழியாக அமைந்துள்ளது. 40சதவீத அதிக வேகம் கொண்ட Airtel இணையம் மற்றும் Google Play இன் பாதுகாப்பு ஆகிய பயன்களின் துணையுடன் தமது ஸ்மார்ட்போன்களின் மூலமாகவே டிஜிட்டல் உள்ளடக்கங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு முதன்முதலாக Airtel வாடிக்கையாளர்களுக்கு கிட்டியுள்ளது. எயார்டெல் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய திரைப்படங்கள், இசை, கல்வி உள்ளடக்கம் மற்றும் விளையாட்டுக்கள் அடங்கலாக Google Play store இல் கட்டணம் செலுத்தி பெறப்படும் பல மில்லியன் கணக்கான apps பயன்பாடுகளை அடைந்துகொள்ள முடியும்.  

“பெருந்தொகையான மக்கள் இணையத்தை உபயோகிப்பினும், சொந்தமாக கடனட்டையைக் கொண்டிராமை காரணமாக இணையத்தின் மூலமான கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். இந்தக் கூட்டிணைவானது, எமது வாடிக்கையாளர்களுக்கு மேற்குறிப்பிட்ட தேவையை சௌகரியத்துடனும், பாதுகாப்பான வழியிலும் மேற்கொள்ள இடமளித்துள்ளது. டிஜிட்டல் வழிமுறை விற்பனையாளர்கள் மற்றும் app stores ஆகியோர் நேரடியாகவே மொபைல் சேவை வழங்குனரை எட்டும் வகையில் இது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர் மட்ட கொடுப்பனவுத் தீர்வாகும்”  என்று Bharti Airtel Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜினேஷ் ஹெக்டே கூறினார்.  

வாடிக்கையாளர்கள் தமது android அலைபேசி சாதனங்களின் மூலமாக தமது Google Play கணக்கு விவரப்பட்டியலில் கொடுப்பனவு வழிமுறைகளின் கீழ் ‘Use Airtel Billing’ என்ற கட்டளையை சேர்த்துக்கொள்வதன் மூலமாக Airpay இனை மிகவும் இலகுவாக செயற்படுத்திக் கொள்ள முடியும். செயற்படுத்தல் நடவடிக்கை பூர்த்தியாகிய பின்னர் தங்களுக்கு விருப்பான உள்ளடக்கத்தின் மீது ‘Buy’ என்பதை இலகுவாக கிளிக் செய்து, ‘Bill my Airtel account’ என்பதைத் தெரிவு செய்து, கொள்வனவை உறுதிப்படுத்துவதற்காக தங்களுடைய Google கணக்கின் கடவுச்சொல்லை வழங்கவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .