2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

BS IV தர உற்பத்திகள் இலங்கையில் அறிமுகம்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

VE வணிக மோட்டார் நிறுவனம் VECV ஆனது Volvo group மற்றும் EICHER மோட்டார் நிறுவனம் என்பவற்றின் ஒரு கூட்டு வணிக முயற்சியாகும். இன் நிறுவனம் BSIV தரத்தினாலான சூழலை மாசுபடுத்தாத பஸ் வண்டிகள் மற்றும் ட்ரக் வண்டிகளை அறிமுகம் செய்கின்றது.  

VECV கூட்டு முயற்சி நிறுவமானது, தனது பூரண உரிமம் கொண்ட துணை நிறுவனங்களின் ஊடாக இலங்கையில் கடந்த 5 வருடமாக தனது நாமத்தை நிலைநாட்டியுள்ளது. EICHER வியாபார நாமம் தாங்கிய ட்ரக் வண்டிகள் மற்றும் பஸ் வண்டிகள் பல்வேறுபட்ட துறைகளிலும் இலங்கையில் குறிப்பிடத்தக்க ஒரு வளர்ச்சியை ஏற்படுத்துவதில் ஏனைய பல மோட்டார் வணிக நாமங்களுக்கு மத்தியில் சான்று பகரக் கூடிய ஒன்றாக விளங்குகின்றது.

அது மட்டுமல்லாது இந்நிறுவனத்தின் நவீனமயமாக்கலை இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இந்நாட்டின் முதன் முதலாக (EURO III தரத்துக்கு நிகரான) BS III தரத்தினாலான மோட்டார் வாகனங்களை அறிமுகப்படுத்தி வைக்கின்றது.   

இவ்வங்குரார்ப்பண நிகழ்வில் VE மோட்டார் வணிக நிறுவனத்தின் சர்வதேச வியாபாரத்துறையின் மூத்த துணை தலைவர் எஸ்.எஸ் கில் குறிப்பிடும் போது “புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட EICHER PRO BS IV ரக மோட்டார் வாகனங்கள் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நீண்ட ஆயுள் கொண்ட வெறெந்த வாகனங்களிலும் கிடைக்கப்பெறாத திறன்களை உள்ளடக்கிய நம்பகத்தன்மை கொண்ட உயர் பாதுகாப்புடன் கூடிய வாகனங்களாகும். இதன் வலுவான சக்திமிக்க மதிப்பிடும் M Booster, M. Booster + மற்றும் சாரதிகளுக்கான நுண்ணறிவு மிக்க தகவல் சேவை போன்ற பல்வகைமை கொண்ட தொழில்நுட்பம், எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய நியாயமான செயற்பாட்டுச் செலவு என்பன வேகமான ஒரு முதலீட்டை நோக்கிக் கொண்டு செல்லக்கூடிய வகையிலும் இலங்கைக்கு பெருமை சேர்க்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது அதியுயர் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு உயர் தரத்தினாலான பாதுகாப்பு பரிசீலனைக்கும் உற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வகையிலான பஸ் வண்டிகள் ABS Anti Lock Braking System உடன் கூடிய நிறுத்துதல் தொகுதியையும் உள்ளடக்கி நாடுபூராகவும் பாவனையாளர்களுக்கு பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார்.   

இவ்வங்குரார்ப்பண நிகழ்வோடு EICHER நிறுவனம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் டிப்பர் வண்டிகளையும் இவ்வாறான அதியுயர் பயன்பாட்டுத்திறன் கொண்டதாக விரிவுபடுத்த வேண்டும் உறுதியளித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் கட்டுமானத்துறை தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றது. அத்தோடு நடுத்தர மற்றும் சாதாரண தர பஸ் வண்டிகளையும் BS IV Skyline Pro தரத்திற்கு விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என உத்தேசித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .