2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Biz Quiz 2018 இல் 99X Technology வெற்றியாளராக தெரிவு

Editorial   / 2018 ஜூன் 11 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

Glitz Biz Quiz 2018 நிகழ்வில் வெற்றியாளர்களை விட ஒரு புள்ளி வித்தியாசத்தில் 99X Technology இரண்டாமிடத்துக்கு தெரிவாகியிருந்ததுடன், முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களின் போட்டியாளர்கள் ஐந்து சுற்றுகளில் தமது அறிவுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்காக கடுமையாக போட்டியிட்டிருந்தனர்.  

99X Technology Quiz அணியில் இணை தொழில்நுட்ப லீட்களான ஷிரந்த டி அல்விஸ் மற்றும் ரங்கித குருப்பு, சிரேஷ்ட தொழில்நுட்ப லீட் சுதத் தேநுவர ஆகியோர் அடங்கியிருந்தனர். இவர்கள் 30 கூட்டாண்மை அணிகளுடன் போட்டியிட்டிருந்ததுடன், சுமார் 50 வினாக்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இவர்களின் திறமையான செயற்பாட்டினூடாக, தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக இவர்களுக்கு IT/Software பிரிவில் வெற்றியீட்ட முடிந்ததுடன், சகல பிரிவுகளிலும் இரண்டாமிடத்தைச் சுவீகரித்தது.   

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த quiz நிகழ்வில், டயலொக் அக்ஸியாடா, மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, DFCC வங்கி, செலான் வங்கி மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்களின் போட்டியாளர்களும் பங்கேற்றிருந்தனர்.  

2017 ஆம் ஆண்டின் போட்டித்தொடரில் Mercantile Quiz சாம்பியன்களாகத் தெரிவாகியிருந்த 99X Technology Quiz அணி, மற்றுமொரு வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் இம்முறை போட்டியில் ஈடுபட்டிருந்தது. ஆனாலும், 2016ஆம் ஆண்டின் வெற்றியாளர்களான மக்கள் வங்கியின் அணியுடன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.  

பொது அறிவில் அதிகளவு ஆர்வமுள்ள குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டித் தொடரில், 99X Technology Quiz அணி தொடர்ச்சியாகத் தனது பிரசன்னத்தை வெளிப்படுத்தி வருவதுடன், தொடர்ச்சியாகத் தனது நிலையை உறுதி செய்த வண்ணமும் திகழ்கிறது.  

கடந்த ஆண்டு, Biz Quiz போட்டியின் சம்பியனாகத் தெரிவாகியிருந்தமைக்கு மேலாக, Biz Quiz 2015 இல் மூன்றாமிடத்தைப் பிடித்திருந்தமை, 2015 CMI Corporate Quiz இல் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றும் 2014 Governor’s Challenge கிண்ணம் Quiz போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தமை போன்றன, இந்த அணியின் சாதனைகளாக அமைந்துள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .