2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

Christic Lanka Polymers (Pvt) Ltd நிறுவனம் Lloyd’s Register அங்கிகாரங்களைப் பெற்றுள்ளது

Gavitha   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலாப்படகு மற்றும் விசைப்படகு உற்பத்தித் தொழில் தொடர்பாக ஒரே நேரத்தில் மூன்று Lloyd's Register அங்கிகாரங்களைப் பெற்ற முதல் இலங்கை நிறுவனமாக Christic Lanka Polymers (Pvt) Ltd சாதனை படைத்துள்ளதுடன், இது நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான சாதனை இலக்காகவும் மாறியுள்ளது.

CDP 2169 PT-6, CDP 2146 PT-5 LAMINATING மற்றும் CDP 2196-1 சான்றிதழ்கள் முறையே உலாப்படகு மற்றும் விசைப்படகு உற்பத்தியில் நிறைவுறாத பாலி பிசின்கள் (unsaturated poly resins) மற்றும் ஜெல் கோட் பிசின்கள் (gel coat resin) ஆகியவற்றுக்காக பெறப்பட்டுள்ளன. Lloyd's Register என்பது சமுத்திரம் மற்றும் கடல் சார் தொழிற்றுறைகளுக்கான வகைப்பாடு, இணக்கப்பாடு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி சர்வதேச நிறுவனமாகும்.

இந்த சாதனை இலக்கு தொடர்பில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீமத் டயஸ் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எந்தவொரு வெளிநாட்டு தொழில்நுட்ப பரிமாற்றங்களும் இல்லாமல் எங்கள் சொந்த உற்பத்திச் சூத்திரங்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இந்த மூன்று மதிப்புமிக்க அங்கிகாரங்களைப் பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு மதிப்புமிக்க தரச்சான்று அங்கீகரமாகும். மேலும் குறுகிய காலத்திற்குள் இதற்கான தேவைப்பாடுகளை வழங்குவதற்காக மிகவும் கடினமாக உழைத்த எங்கள் அணியையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சேவை செய்ய இது எங்களுக்கு ஒரு உண்மையான போட்டித்திறன் அனுகூலத்தை வழங்கும்”  என்று குறிப்பிட்டார்.

Christic Lanka Polymers (Pvt) Ltd நிறுவனம் ISO  9001-2016 தரச்சான்று அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனம் என்பதுடன், இலங்கையில் படகு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் இதன் வாடிக்கையாளர்கள். இந்நிறுவனம் ஒரு முழுமையான நார்-வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (Fiber-Reinforced Plastic) சோதனை ஆய்வுகூடத்தைக் கொண்டுள்ளது. தேவையான அனைத்து சான்று அங்ககாரங்களுடனும், Lloyds Register அங்கிகாரம் பெற்ற அளவுருக்களுக்குள் உற்பத்தி முறைகளுக்கு ஏற்றவாறு நிறைவுறா பாலியஸ்டர் பிசின்களைக் (unsaturated polyester resins) கலப்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலை 2006 இல் நிறுவப்பட்டது. தகைமைபெற்ற இரசாயன மற்றும் மின் பொறியியலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றுவதால், தயாரிப்புகள் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு தராதரத்தில் இருப்பதை உறுதிப்படுத்த கடுமையான தர முகாமைத்துவ நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .