2024 மார்ச் 28, வியாழக்கிழமை

Daraz.lkஇன் 85 சதவீத விலைக் கழிவு விற்பனை

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

Daraz கறுப்பு வெள்ளி, ஒரு மாபெரும் வருடாந்த நிகழ்வாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக் கழிவுகளுடன், இது, நவம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு முன்னெடுக்கப்படுகிறது. தினந்தோறும் மாபெரும் விலைக் கழிவுகளுடன், புதிய வகை உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. Daraz - 2016ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைத்த ‘கறுப்பு வெள்ளி’ நிகழ்வு, இவ்வருடமும் மேலும் சிறந்த முறையில், பாரியளவில் இடம்பெற உள்ளது. 

இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் பாட் வான் டிஜ்க், Daraz - ‘கறுப்பு வெள்ளி’ நிகழ்வு பற்றிக் கருத்து வெளியிடுகையில், “இவ்வருடத்துக்கான மாபெரும் விற்பனை நிகழ்வுக்கு நாம் தயாராகி வருகின்றோம்” என்று கூறினார். “அளவிலும், பெறுமானத்திலும் இது மிகப்பெரிய நிகழ்வாக அமைய இருக்கிறது. ‘கறுப்பு வெள்ளி’ என்பது, வெறுமனே ஒரு விற்பனை மாத்திரமல்ல. அது ஒரு நிகழ்வின் அனுபவமாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாம் கடுமையாக உழைத்து வருகின்றோம். எமது பங்காளி விற்பனை நிறுவனங்கள் மற்றும் விநியோகத்தர்களுக்கு இந்த நிகழ்வு வரலாறு காணாத வெற்றிக்கு இட்டுச் செல்லும். அதற்காக நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினார். 

இவ்வருட கறுப்பு வெள்ளியானது, நவம்பர் 20ஆம் திகதி முதல் ஒரு வார காலத்துக்குத் தொடர்ந்து இடம்பெறும். 20 முதல் 23ஆம் திகதி வரை, தினமும் புத்தம் புதிய உற்பத்தி வகை அறிமுகப்படுத்தப்படும். 24ஆம் திகதியின் பின்னர் சகல பொருட்களும் விற்பனைக்கு விடப்படும். 

இந்த நிகழ்வில், Daraz - ஸ்டான்டட் சார்ட்டட் வங்கி மற்றும் செலான் வங்கி என்பனவற்றுடன் இணைந்து, மேலதிகக் கழிவுகளையும், மாதாந்தக் கொடுப்பனவு முறைகளையும் அறிமுகப்படுத்துகிறது. 

5,000 க்கும் மேற்பட்ட புதிய அசல் பொருட்களை, ஒன்லைன் மூலம், Daraz.lk இடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 85% வரையிலான விலைக்கழிவுகள் பெற்றுக் கொடுக்கப்படும். பல்வேறு வகையான நாகரிக உற்பத்திகள், சுகாதார மற்றும் அழகுசாதனப் பொருட்கள், இலத்திரனியல் மற்றும் வீட்டுத் தளவாடங்கள் என்பன இதன் போது விற்பனைக்கு வரவுள்ளன. இந்த நிகழ்வின் போது புகழ் பெற்ற வர்த்தக நாமங்களான அப்பிள், சம்சங், லோறியல், டிம்பர்லான்ட், கனொன், HP, ஸ்கல்கென்டி, Asus உட்பட மேலும் பல உற்பத்திகளும் விற்பனையாகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X