2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

HNBயுடன் Hyundai Lanka கைகோர்ப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் Hyundai வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக உரிமையைக் கொண்ட Hyundai Lanka (Pvt) Ltd. வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய Hyundai வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக லீசிங் தீர்வுகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஹற்றன் நஷனல் வங்கியுடன் கைகோர்த்துள்ளது.  

இந்த பிரத்தியேகமான லீசிங் தீர்வினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த இலங்கையர்களுக்கு, Hyundai Lanka மாதிரிகளை Hybrid, SUV மற்றும் Hatch back மாதிரிகளை IONIQ hybrid, Subcompact SUV Creta மற்றும் விருதை வென்ற Grand i10 ஆகிய வகைகளிலிருந்து HNB லீசிங் ஊடாக வழங்கப்படும் விசேட லீசிங் விலைக்கழிவுகள், இதர வெகுமதிகளுடன் கொள்வனவு செய்யலாம்.  

மேலும், Hyundai வாடிக்கையாளர்களுக்கு தமது நிதித் திறனின் பிரகாரம் லீசிங் தீர்வுகளை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வசதி காணப்படுவதுடன், நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் திட்டங்களை தெரிவு செய்து கொள்ளலாம். இலவச காப்புறுதியுடன், இதர பெறுமதி சேர்க்கப்பட்ட அனுகூலங்களுக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

இந்தப் பங்காண்மை தொடர்பாக Hyundai Lanka (Pvt) Ltd. இன் பணிப்பாளர் ஜுலியன் ரொய்டர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தரம் வாய்ந்த பொருட்கள்,  சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எப்போதும் கவனம் செலுத்துகிறோம். இந்த வசதியினூடாக பெருமளவான இலங்கையர்களுக்கு எமது புத்தம் புதிய Hyundai வாகனங்களைத் தமக்குச் சௌகரியமான முறையில் கொள்வனவு செய்வதற்கு முடியும். மேலும், HNB உடன் கைகோர்த்து இலங்கையர்களின் கனவை நிறைவேற்றிக் கொள்ள நாம் வாய்ப்பை வழங்குவது மாத்திரமின்றி, உயர் மாதாந்த வாடகைகளைச் செலுத்தும் நிதிச் சுமையை குறைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .