2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

INSEE சீமெந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் சைச்சாத்து

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் முன்னணி சீமெந்து விநியோகத்தரான INSEE சீமெந்து, சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சூழல் அதிகாரசபையுடன் கழிவு முகாமைத்துவம் தொடர்பான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. 

சுற்றாடல் அமைச்சர் கௌரவ. மஹிந்த அமரவீரவின் மேற்பார்வையின் கீழ் INSEE சீமெந்து இரு தனியார்-பொது பங்காண்மை (PPP) உடன்படிக்கையை தயாரித்து, நாட்டில் நிலைபேறான கழிவுத் தீர்வுகளின் அடிப்படையில் சுழற்சி பொருளாதாரத்துக்கமைய கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் INSEE சீமெந்தின் தவிசாளர் நந்தன ஏக்கநாயக்க மற்றும் INSEE Ecocycle சார்பாக அதன் பணிப்பாளர் சஞ்ஜீவ சூளகுமார ஆகியோரும், அமைச்சின் சார்பாக அமைச்சர் அமரவீர கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் INSEE சீமெந்து மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், காபன் பேனைகள் மற்றும் பற்தூரிகைகள் போன்ற கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு INSEE Ecocycle இனால் மீள்சுழற்சிக்குட்படுத்தப்படும். “விதிமுறை அல்ல, ஒழுக்கம்” எனும் கருப்பொருளுக்கமைய இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக நாட்டின் குடிமக்களின் தினசரி நடவடிக்கைகளில் ஒழுக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களை பங்களிப்பு செய்யச் செய்வது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

இந்த பங்காண்மை ஆரம்பிப்பதை குறிக்கும் வகையில் INSEE சீமெந்து, சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சூழல் அதிகார சபை ஆகியன இணைந்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அடையாளச்சின்னமிடப்பட்ட கழிவுத் தொட்டி ஒன்றை அன்பளிப்பு செய்திருந்தன. இந்த நிகழ்வில் அமைச்சர் அமரவீர, நந்தன ஏக்கநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இது போன்ற மேலும் பல கழிவுத் தொட்டிகள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவு திரட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கையும் “சோப அமா” எனும் தலைப்பில் அமைச்சர் மஹிந்தர அமரவீரவினால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் போது INSEE சீமெந்தினால் மாதாந்தம் 5,000 தாவரக் கன்றுகள் பொது மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்காக அமைச்சுக்கு கையளிக்கப்படும்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்து தொடர்பாக நந்தன ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமையினூடாக, நிலைபேறான வகையில் கழிவை கட்டுப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சூழலில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் நலனில் பங்களிப்பு செய்யக்கூடியதாக அமைந்திருக்கும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .