2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

SLIIT Computing இனால் BEng Honours பட்டம் அறிமுகம்

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவின் லிவர்பூல் மூவர்ஸ் பல்கலைக்கழகத்துடன் SLIIT Computing கைகோர்த்து 3 வருட காலத்துக்கான இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் BEng பட்டக்கற்கையை அறிமுகம் செய்யவுள்ளது. 2018 ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தக் கற்கைகளுக்கான ஆட்சேர்ப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய கற்கை அறிமுகமானது, இலங்கையில் இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையில் மத்தியளவு பட்டத்தை வழங்கும் புகழ்பெற்ற கல்வியகமான SLIIT Computing ஐ திகழச் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் பட்டக்கற்கைகளை வழங்கும் இலங்கையின் மாபெரும் கல்வியகமும், இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்தையும் பெற்ற, இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் (SLIIT) துணை நிறுவனமாக SLIIT Computing திகழ்கிறது. 17 வருடங்களுக்கு மேலாக SLIIT இனால் தகவல் தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் பொறியியல் தொடர்பான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய கற்கை மாணவர்களுக்கு இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் தொடர்பான முழுமையான அறிவை வழங்குவதுடன், அத்தியாவசியமான சகல பிரிவுகளையும் உள்வாங்கி, நிபுணர்களாக திகழ்வதற்கு அவசியமான சகல ஆளுமைகளையும் பெற்றுக்கொடுக்கும். 

SLIIT மற்றும் SLIIT Computing ஆகியன நீண்ட கால உறவை கொண்டுள்ளதுடன், பிரித்தானியாவின் லிவர்பூல் ஜோன் மூவர்ஸ் பல்கலைக்கழகத்துடன் விசேட ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இது உயர் மட்ட தரப்படுத்தல்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்பதுடன், 100 நாடுகளின் 25,000 மாணவர்களை தன்வசம் கொண்டு, 250க்கும் அதிகமான பட்டங்களையும் வழங்கி வருகிறது. “Educate north and UK leadership awards and conference” மாநாட்டில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த பல்கலைக்கழகத்துக்கான விருதை இந்தப் பல்கலைக்கழகம் பெற்றிருந்தது. பிரித்தானியாவில் காணப்படும் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. புதியப் பட்டப்படிப்பின் மூலமாக மாணவர்களுக்கு தமது சொந்தத்தீர்வுகளை பிரச்சினைகளுக்கு பிரேரிக்கும் வகையில் அமைந்துள்ளன. வணிக செயற்றிட்ட அபிவிருத்தி தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் ஊடாக உதவிகள் வழங்கப்படுவதுடன், செயற்றிட்டங்களை கையாள்வது மற்றும் திட்டமிடுவதற்கும் அவசியமான ஆளுமைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும். 

புதிய கற்கையின் அறிமுகம் தொடர்பில் SLIIT இன் உப வேந்தர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியும், SLIITC இன் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் தகைமை வாய்ந்த இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர்களுக்கு பெருமளவு கேள்வி காணப்படுவதை நாம் இனங்கண்டிருந்தோம். ஆனாலும், ஒருசிலர் மட்டுமே இந்தத்துறையை தமது உயர் கல்விக்காக தெரிவு செய்கின்றனர். இதன் காரணமாக, நாம் இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியலில் BEng கற்கையை அறிமுகம் செய்ய தீர்மானித்தோம். இந்தக்கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு, பட்டத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த கற்கைக்கான முதலாவது ஆட்சேர்ப்பு தற்போது நடைபெறுவதுடன், கற்கைகள் ஜனவரி 2018 முதல் ஆரம்பமாகவுள்ளது” என்று  ​ெதரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X