2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து ‘mPower’ அறிமுகம்

S.Sekar   / 2021 மார்ச் 05 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனியார் துறைக்காக mPower ஒன்றிணைந்த சாதன சலுகையை அறிமகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் முதன் முறையாக இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் மத்தியில் வழங்கப்பட்ட ஒன்றிணைந்த சாதன சலுகை வெற்றிகரமாக அமைந்திருந்தமை மற்றும் திறன்பேசிகள் இணைப்புத் தீர்வுகளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்கின்றமை போன்றன mPower அறிமுகத்துக்கு ஏதுவாக அமைந்திருந்தன. இதனூடாக தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தரமான திறன்பேசியை மலிவு விலையில் கொள்வனவு செய்ய வாய்ப்பை வழங்குவதுடன், கவர்ச்சிகரமான குரல் மற்றும் டேட்டா பக்கேஜ்களையும் வழங்குகின்றது. மொபிடெலின் mPower என்பது, தேசத்தின் நோக்கமான டிஜிட்டல் தயார்நிலையை மேம்படுத்துவது மற்றும் சகல இலங்கையர்களின் வினைத்திறனை மேம்படுத்துவது என்பதற்கமைய அமைந்துள்ளது. சாதனங்களுடன் கவர்ச்சிகரமான பிற்கொடுப்பனவு குரல் அழைப்பு பக்கேஜ்களை அறிமுகம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் மொபிடெல், தனியார் துறைக்கு mPower சலுகையை அறிமுகம் செய்து மேலும் தனது சேவை வழங்கல்களை மேம்படுத்தியுள்ளது.

mPower ஊடாக தனியார் துறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தொடர்பாடல் தேவைகளுக்கு தீர்வுகள் எவ்வாறு வழங்கப்படும் என்பது தொடர்பில் மொபிடெலின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் கருத்துத் தெரிவிக்கையில், 'வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில், எமது நீடிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் mPower அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனூடாக, தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தரமான சாதனங்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிறுவனம் எனும் வகையில், சகலருக்கும் தகவலை அணுகக்கூடியதாக இருக்கச் செய்வதிலும், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதிலும் பங்களிப்பு வழங்க மொபிடெல் பெருமளவு எதிர்பார்க்கின்றது. இந்த செயற்பாட்டை இலகுவாக்கவும் சகாயப்படுத்தவும் கூடியதாக mPower அமைந்திருக்கும்.' என்றார்.

mPower சாதன சலுகை இலங்கையின் சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் அறிமுகம் செய்துள்ள புதிய சலுகை இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாள் முதல் வழங்கப்படுகின்றது. இந்த அறிமுகத்தின் அங்கமாக, SLT-Mobitel இனால் mPower பக்கேஜ் உடன் Samsung Galaxy M01s திறன்பேசியை கொள்வனவு செய்யும் போது 29% சேமிப்பையும் வழங்குகின்றது. வழமையான விற்பனை விலையான ரூ. 27,999 என்பதுடன் ஒப்பிடுகையில், ரூ. 18,900 எனும் விலையில் இந்த சாதனம் கிடைக்கும்.

எந்தவொரு வலையமைப்புக்கும் 500 நிமிடங்கள் மற்றும் 1GB டேட்டா இலவசம் என்பதுடன், இணைப்புக் கட்டணமாக ரூ. 1000 அறவிடப்படுவதுடன், மாதாந்த வாடகையாக ரூ. 350 அறவிடப்படும். மேலும் தேவையான GB இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளரை மையப்படுத்திய வர்த்தக நாமம் எனும் வகையில், தொடர்ச்சியாக தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த மொபிடெல் தன்னை அர்ப்பணித்துள்ளது. தேசத்தின் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக சிறந்த சேவைகளை SLT-Mobitel வழங்குவதுடன், இலங்கையின் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் புத்தாக்கமான இணைப்புத் தீர்வுகளை அறிமுகம் செய்த வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .