2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

SampathCards வாடிக்கையாளர்களுக்கான அழைப்பு

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பண்டிகைக்காலத்தில் மிகச் சிறந்த சலுகைகளைப் பெற்று அனுபவிக்கும் வகையில் ஏராளமான வியப்பூட்டும் சலுகைகளுடன், விடுமுறை பருவ காலத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பை SampathCards தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இப்பருவக் காலத்தில் சம்பத் மாஸ்டர்காட், வீசா கடன் அட்டை வாடிக்கையாளர்கள் மற்றும் சம்பத் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டை வாடிக்கையாளர்கள் மறக்க முடியாத அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதுடன், தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு கொள்வனவின் மூலமாகவும், அற்புத சுவையை அனுபவித்து, மிகவும் நவீன நவநாகரிகங்களைப் பெற்று மேலும் பல சிறப்புக்களுடன் சேமிப்பையும் மேற்கொள்ள முடியும் என வங்கி அறிவித்துள்ளது. 

“ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இலங்கையில் கடனட்டையின் பரிமாணத்துக்கு மீள்வரைவிலக்கணமளித்து வந்துள்ள SampathCards, நுகர்வோருக்கு தொடர்ந்தும் உயர் மட்டங்களிலான பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் மன அமைதியை வழங்கி வந்துள்ளது. இப்பண்டிகைக் காலத்தில் SampathCards வழங்கும் வியப்பூட்டும் ஏராளமான சலுகைகளுடன் தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறை உற்சாகத்தை ஆரம்பிக்குமாறு நாம் எமது அட்டை வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்”  என்று சம்பத் வங்கியின் அட்டை மையம், இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை மற்றும் வங்கித் தாள் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான குசால் டி சில்வா குறிப்பிட்டார்.  

“ஆண்டுதோறும் SampathCards தொடர்ந்தும் பாரிய அளவிலான தள்ளுபடிகளையும், விசாலமான தெரிவின் கீழான விற்பனைப் பங்காளர்களையும் வழங்கி வந்துள்ளது. இந்த விடுமுறை காலத்தில் 1,500 இற்கும் மேற்பட்ட பங்காளர் வர்த்தக மையங்களுடன் 50% வரையான தள்ளுபடிகளுடன் நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகச் சிறந்த, மிகப் பாரிய சலுகைத் தெரிவுகளை எமது அட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்”  என்று சம்பத் வங்கியின் அட்டை சந்தைப்படுத்தல், பணம் அனுப்பல் சேவைகள், அறிவு நடைமுறை வெளிச்சேவையமர்வு மற்றும் வங்கித்தாள் தொழிற்பாடுகள் ஆகியவற்றிற்கான சிரேஷ்ட முகாமையாளரான தர்ஷின் பத்திநாயக்க குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .