2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

Spark 2018 கண்காட்சிக்கு டயலொக் அனுசரணை

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

​​கொழும்பு றோயல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு கண்காட்சியான Spark 2018க்கு டயலொக் அனுசரணை வழங்கியதுடன், இதில் இலங்கையில் 700 க்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

2018 செப்டெம்பர் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை றோயல் கல்லூரி வளாகத்தில் இலங்கையின் ஆய்வாளர்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை திணைக்களங்கள் தமது கண்காட்சிகளை தொடர்ந்து காட்சிப்படுத்தியிருந்தன.  

Spark 2018 பிரத்தியேக ‘Future Pavilion’ பார்வையாளர்களை ஈடுப்படுத்தி ஆச்சிரியப்படுத்தியுள்ளது. ‘Future Pavilion’ என்பது IoT தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் தீர்வுகள் பல்வேறு வகையான அபிவிருத்தியாளர்கள் மற்றும் உள்ளடக்க வழங்குனர்களை கொண்ட Ideamart இனால் இயக்கப்படுகின்றது. ஸ்மார்ட் நகரங்களில் ஸ்மார்ட் வானிலை நிலையங்கள், குளோபல் சென்சர் மற்றும் ஸ்மார்ட் மீற்றர் ஆகியவை IoT இன் முக்கியத்துவத்தின் மூலம் எதிர்காலத்துக்கான சிறந்த சூழலுக்கு வழிவகுக்கின்றது.   

மேலும், Future Pavilion என்பது டயலொக் இனால் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் தெற்காசியாவிலும் மற்றும் இலங்கையிலும் முதற் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்களான அடுத்த தலைமுறையினருக்கான உருமாற்றம் AI, NBIoT boards, eSIM தொழில்நுட்பம் மற்றும் Google Home மற்றும் வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவத்திற்கான Amazon Alexa ஒருங்கிணைப்பு ஆகியவையும் காட்சிப்படத்தப்பட்டுள்ளன. 

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Genie கொடுப்பனவு App - இலங்கையின் முதல் PCI-DSS சான்றளிக்கப்பட்ட மொபைல் கட்டண பயன்பாடும்; கண்காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதிர்ஷ்ட சக்கரம், தொழில்நுட்பம் வினாடி வினா, மற்றும் gaming zone போன்றவையும் சிறப்பம்சங்களாக காணப்படுகின்றது.  

இந்த கண்காட்சியானது உணவு மற்றும் வேளாண்மை, ICT, மின் உபகரணங்கள் (கல்வி மற்றும் பொழுதுபோக்கினை உள்ளடக்கியது) வீட்டுத் தொழில்நுட்பம், மற்றும் உபகரணங்கள், நுகர்வோர் பொருட்கள், ஆடை மற்றும் நாகரிக பொருட்கள், போக்குவரத்து, பசுமை தொழில்நுட்பம், எரிசக்தி விளையாட்டு, விளையாட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் என பல வகையான பிரிவுகளில் இடம்பெற்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .