2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Uber காப்புறுதி மற்றும் பாதுகாப்புக் கருவிகள் அறிமுகம்

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

Uber, தொழிற்றுறையில் முதல் முறையாக, தனது பயனாளிகளுக்கும், சாரதிப் பங்காளிகளுக்கும் பயணங்களின் போதான காப்புறுதித் திட்டங்களையும் சர்வதேச பாதுகாப்புக் கருவிகள் தொகுதியையும் அறிமுகம் செய்துள்ளது. பயணங்களில் தெற்காசியாவின் 11ஆவது மிகப் பெரிய நகரமான கொழும்பில் இதனை மேற்கொண்டுள்ளது. இலங்கையில், தனது செயற்பாடுகளை ஆரம்பித்து மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு, Uber இவ்விரண்டு வசதிகளையும் வழங்குகிறது.  

இந்த அறிமுக நிகழ்ச்சியின் போது, தெற்காசிய நகரங்களுக்கான Uber தலைவர் பிரப்ஜீத் சிங்க கருத்து வெளியிடுகையில், “எமது பயனாளிகள் மற்றும் சாரதிப் பங்காளிகளிடமிருந்து, எமக்குக் கிடைக்கும் வரவேற்புக் குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம். இதுவரை கொழும்பு நகரில் 25,000 க்கும் அதிகமான சாரதிப் பங்காளிகளுடன் நுண் தொழில் முயற்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இந்தச் சந்தை மீதான எமது ஈடுபாட்டை, மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எமது பாதுகாப்புக் கருவித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் காணப்படும் அவசரத் தேவைப் பொத்தான் ஊடாக, அவசரத் தேவைகளையும் எந்தவித செலவுகளும் இன்றிக் காப்புறுதியையும் பயனாளிகளும் சாரதிகளும் Uber APP ஐ பயன்படுத்தும் போது பெற்றுக்கொள்கின்றனர். எதிர்வரும் வாரங்கள், மாதங்களில் தொடர்ச்சியாக எமது சாரதிப் பங்காளிகளுடனும், பயனாளிகளுடனும் இணைந்து செயற்பட்டு, எமது பயனாளிகளின் மிகப் பிரியமான பயண முறையாகவும் எமது சாரதிப் பங்காளிகளுக்கு கவர்ச்சிகரமான ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க ஈடுபாட்டுடன் செயற்படுகின்றோம்” என்று கூறினார்.  

இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, பாதுகாப்புக் கருவித் தொகுதியானது, தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட, Uber App பயனாளிகளுக்கு மிகச் சிறந்ததோர் அறிமுகமாகும். இதன் மூலம் Uber பயன்படுத்தும் இலங்கைப் பயனாளிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு அதிகரிக்கிறது. அது தொடர்பான விவரம் மற்றும் பயன்பாட்டு விவரங்கள் என்பனவற்றுடன் ஏற்கெனவே காணப்பட்ட விடயங்களுடன் மேலும் பல அம்சங்களும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. 

APP இன் Home Screen இல் பாதுகாப்புக் கருவித் தொகுதியை இலகுவாக அடையக்கூடியதாக இருப்பதோடு, சாரதி, பயணத்தை ஏற்றுக்கொள்ளும் நொடியிலிருந்து, பயணம் முடிவு வரை இது செல்லுபடியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .