2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 09.09.2019 - 12.09.2019

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

09.09.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 381 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ், அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.  

10.09.2019  

சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அ.ப.வி.சு நேர் பெறுமதியையும் S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 716 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மெல்ஸ்டாகோர்ப், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி மற்றும் யூனியன் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர். 

11.09.2019  

ஹற்றன் நஷனல் வங்கி, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் பிரவுண் அன்ட் கம்பனி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப்பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 427 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் யூனியன் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

12.09.2019  

கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், கொமர்ஷல் வங்கி, மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 581 மில்லியாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ரேணுகா அக்ரி ஃபுட்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ரேணுகா கெப்பிட்டல் மற்றும் சியெர்ரா கேபள்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

13.09.2019  

பினர யோபா விடுமுறை தினம் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.  

வாரத்தில் அபவிசு 0.47% உயர்வையும் S&P SL20 0.10% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 527 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .