2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலகை தன்பால் திரும்பச் செய்த சிறுவன்

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கை,கால், விழிபுலன், செவிபுலன் என அனைத்தும் சிறப்பாக இயங்கினாலும்கூட சுயநலம், நயவஞ்சகம் என பல நேரெதிரான சிந்தனைகளைக்கொண்டு மனதளவில் வலுவற்று காணப்படுபவர்களே இன்று உலகில் பரந்தளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில், வலுவிழந்த நிலையில் பிறக்கும் மானுடங்கள், பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என இறாது, வாழ்நாளில் தமது பெயரை பலரது மனதில் பதியச் செய்யும் அசாத்திய திறமைமிக்கவர்களாக விளங்குவதை ஒருவராலும் மறுத்துவிட முடியாது.

இத்தகைய அசாத்திய திறமைமிக்க  ஒரு சிறுவனே டியோ ஸ்டேரியோ. பிறப்பிலே கால்கள் மற்றும் கைகளின்றி பிறந்த இச்சிறுவன், கண்ணத்தின் உதவியுடன் கணினியை இயக்கும் அசாத்திய திறமைமிக்கவனாக வலம் வருகின்றான்;. இதுவே, தற்போது அவனது அடையாளமாகியும் உள்ளது.

11 வயதுடைய இச்சிறுவன் இந்தோனேஷியாவின், மேற்கு ஜவா மாகாணத்தில் வசித்து வருகின்றான். பிறப்பிலேயே கைகள் மற்றும் கால்களின்றி பிறந்ததால் இவனது எதிர்காலம் என்னவாகும்? என்பதே பெற்றோரின் மனக்குறையாக இருந்;தது.  பெற்றோரின் மனக்குறையை தீர்க்கும் வகையில் தற்போது இச்சிறுவன், கணினியை தனது கண்ணத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளமை உலகை இவன்பால் திரும்பச்செய்துள்ளது.

தான் வலுவற்றவன் என்பதை சற்றேனும் உணராத அச்சிறுவன், எப்போதும் மகிழ்வுடனே இருப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

'விசேட தேவையுடையோருக்குறிய பாடசாலையில் கல்விக் கற்றுவரும் இவன், ஒவ்வொரு நாளும் குளித்த பின்பு கணினியில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளான்;. பின்னர் ஆசிரியர் வந்து அழைத்துச் செல்வார். பாடசாலை முடிந்து வந்தப் பிறகும் கணினியே அவனது உலகமாகும். பேனையை வாயில் வைத்து எழுத கற்றுக்கொண்டுள்ளான். படிப்பில் சிறந்து விளங்குகின்றான்' எனவும் சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இச்சிறுவன் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கு முன்னேறியுள்ளதாக சிறுவன் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடையோருக்குறிய பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார். இதேவேளை, சிறுவன் கணிதத்தில் தேர்ச்சிமிக்கவனாக  விளங்குவதாகவும் கணிதப் பாடத்தில் மற்றைய மாணவருக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் திறம்பட தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.

சிறுவன் வலுவிழ்ந்த நிலையில் பிறந்திருந்தாலும் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .