2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காகத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

George   / 2016 ஜூலை 25 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதியான மனித உயிர்களையே கவனத்தில் கொள்ளாத இன்றைய நாட்களில் சிறிய காகத்தின் உயிரை பெரிதென மதித்து காப்பாற்றிய சம்பவம் கிருளப்பனையில் அண்மையில் பதிவாகியது.

ரொபேட் குணவர்தன மாவத்தை கிருளப்பனை வீதியில் உள்ள புத்தர் சிலைக்கருகில் உள்ள அரச மரத்தடிக்கு கடந்த 22ஆம் திகதி இரவு 11 மணியளவில் தீயணைப்பு வாகனமொன்று வந்து நின்றது.

குறித்த இடத்தில் எந்தவிதமான தீ விபத்துக்களோ, தீ பற்றுவதற்கான அடையாளங்களோ இல்லாத நிலையில் தீயணைப்பு வாகனம் வந்து நிற்பதை கண்டு காணாமலும் பலர் வாகனங்களிலும் சிலர் நடந்தும் சென்றனர்.

தீயணைப்பு வாகனத்திலிருந்து திமு திமுவென இறங்கிய தீயணைப்பு படைவீரர்கள் வாகனத்திலிருந்த கிரேனை பயன்படுத்தி அரசமரத்திலிருந்து எதையோ எடுத்துக் கொண்டு இறங்கினார்.

என்னவென்று ஆவலுடன் பார்க்கும்போது அவர்கள் கையிலிருந்து சுதந்திர வானில் கருப்பு நிற பறவையொன்று கா... கா... என கத்திக்கொண்டே. பறந்துச் சென்றது.

ஆம் இவ்வளவு பரப்பரப்புடன் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியது ஒரு சிறிய காகத்தின் உயிர்தானே என்று நீங்கள் நினைக்கலாம். இதையே தான் அன்று வீதியில் சென்ற பலர் நினைத்திருப்பார்கள்.

ஆனால் சில இளைஞர்கள் அப்படி நினைக்கவில்லை.. குறித்த மரத்தில் சிக்கிய காகம், அங்கிருந்து விடுபட முடியாமல் கத்தியதுடன் அதன் அவலக்குரல் பல மணித்தியாலங்களாக நீடித்தது.

குறித்த காகத்தின் குரலைக் கேட்டு அதனை காப்பாற்ற சில இளைஞர்கள் முயற்சித்து பார்த்தனர், மரம் அரச மரம் என்பதால் அதில் ஏறிச்செல்ல முடியாது என்பதால், ஒரு முடிவுக்கு வந்தவர்களாக சரவணப் பிரியன் எனும் இளைஞர் தீயணைப்பு திணைக்களத்தின் அவசர உதவி இலக்கமான 110க்கு அழைத்து விவரத்தை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அவர்கள் கூறிய விவரங்களை மறுபக்கத்தில் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக்கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.

சிறிது நேரத்தில் சைரன் சத்தத்துடன் சிவப்பு விளக்கு ஒளிர வந்துநின்ற தீயணைப்பு வாகனத்துடன் 6 வீரர்கள் வந்து, கிரேனின் உதவியுடன் காகத்தை மீட்டு பறக்கவிட்டனர்.

சிறிய காகம் தானே என்று நினைத்து அலட்சியப்படுத்தாமல் காகத்தை மீட்க உதவிகோரிய இளைஞர்களும் அதனை மீட்ட தீயணைப்பு படை வீரர்களும் பாராட்டுக்குரியவர்களே!


You May Also Like

  Comments - 0

  • மகி Wednesday, 27 July 2016 04:00 AM

    அருமையான வேலை.... மகிழ்ச்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .