2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மலசலகூட நீர்க்குழாயிலிருந்து சிசு உயிருடன் மீட்பு

Gavitha   / 2016 மார்ச் 25 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாகப் பிறந்த சிசுவொன்றை மலசலகூட நீர்க்குழாயிலிருந்து உயிருடன் மீட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிசுவின் தாய், யார் என்பது குறித்துத் தேடி வருவதாக, சீனாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள யுனான் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையின் பெண்கள் மலசலகூடத்தில் இருந்து குழந்தையொன்று அழுதுக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது.

குழந்தை எந்த இடத்திலிருந்து அழுகின்றது என்று பார்ப்பதற்காக, வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள், பெண்கள் கழிவறைக்குச் சென்றுள்ளனர்.

கழிவறையின் நீர்க்குழாய் வழியே குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதை உணர்ந்த தாதியர்கள், உடனடியாக பொலிஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த படையினர், வைத்தியசாலையிலுள்ள அனைத்து நீர்க்குழாய்களையும் நிறுத்தி வைத்த பின்னர், குழந்தை நீர்க்குழாயின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 3 மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர், புதிதாகப் பிறந்த சிசு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை, அதனுடைய தாய், கழிவறையில் வைத்து பிரசவித்து விட்டு, நீர் ஊற்றியதன் காரணத்தினால் சிசு நீர்க்குழாயில் சிக்குண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணொருவர் இந்தச் செயலைச் செய்யவில்லை என்றும் கருக்கலைப்புக்காக வந்த பெண் ஒருவரே இந்தச் செயலை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ள சீனப் பொலிஸார், சிசுவின் தாயைத் தேடி வருகின்றனராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .