2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

100 மில்லியன் வருட சக்தி கொண்ட அதிசய நீர்த்தொட்டி

Kogilavani   / 2011 நவம்பர் 14 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லீ மகாரணி பயன்படுத்திய குளியல் தொட்டியானது கடந்த டுபாய் சர்வதேச நகை விற்பனை நிகழ்வில் பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

'பிலிங் குளியல்' என்று மகாராணியால் அழைக்கப்பட்ட மேற்படி தொட்டியானது நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்ததுடன் அரிதான கெய்ஜோ இரத்தினக்கற்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொட்டி நோய் நிவாரணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதென நம்பப்படுகின்றது.

தொழில் வல்லுநர்களின் உலக நகைகளை கொண்ட காட்சிப்பெட்டி அடங்கிய டுபாய் சர்வதேச நகை விற்பனை நிகழ்வில் மேற்படி குளியல் தொட்டி பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.  

கெய்ஜோ குழு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் ரேகா பேரேஸா இது குறித்து தெரிவிக்கையில், 'கெய்ஜோ இரத்தினக்கல்லினால் உருவான இந்த குளியல் தொட்டியானது தனிப்பட்ட ஆடம்பர பொருளாகும். இக்கைவினை பொருளானது உலகில் காணப்படும் ஒரேயொரு நோய் நீக்கும் நிவாரணக் கல்லாகும்' என்றார்.

பண்டைய சீனா, அரபு மற்றும் எகிப்திய பழங்குடி மக்கள் இக்கற்களின் அழகு  குறித்தும் நோய் நீக்கும் தன்மைகள் குறித்தும் நன்கு அறிந்தவர்கள். இப்பூமியினதும் பிரபஞ்சத்தினதும் 100 மில்லியன் வருட பழமையை இந்தக் கற்கள் கொண்டுள்ளன.

இப்படியான அதி சக்தி வாய்ந்த கல்லினை சர்வதேச ரீதியில் விற்பனை செய்வது இதுவே முதல் தடவையாகும்;. மற்றும் இதற்கான பதில்களை நாங்கள் சிறப்பாக பெற்றுக்கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் எரிமலை குழம்புகளின் படிவங்களால் கெய்ஜோ என்ற இந்த வலிமையான கற்கள் பூமியின் மேற்பரப்பில்  உருவானவையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .