2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறையில் பெண் கைதிகளின் பெஷன் ஷோ

Kogilavani   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altசீனாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் உள்ள பெண் கைதிகள் இணைந்து பெஷன் ஷோவொன்றை நடத்தியுள்ளனர். இவர்கள் கழிவுப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து இந்த பெஷன்சோவில் பங்குப்பற்றியுள்ளனர்.

சிறைச்சாலையில் உள்ள 120 பெண் கைதிகள் இந்த பெஷன் சோவில் பங்குப்பற்றியதாகவும் இவர்கள் பிளாஸ்டிக் பைகள், தும்பினாலான பைகளின் கைப்பிடிகள், உடைந்த பொருட்கள் போன்றவற்றினால் தயாரிக்கப்பட்ட பொருட்களாலான ஆடைகளை அணிந்த வண்ணம் மேடையில் ஒய்யாரநடை நடந்து பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வு ஹெனான் மாகாணத்திலுள்ள ஷெங்ஸோ பெண்கள் சிறைச்சாலையில் நடைப்பெற்றது. மீள்சுத்திகரிப்பையும் காபனீரொட்சைட் வெளியேற்றத்தை குறைக்கும் வகையிலான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 8 மாலை நேர ஆடைகள், குப்பைகள் சேகரிக்கப்படும் கருப்பு நிற பைகளில் உருவாக்கப்பட்டிருந்தன.

2 திருமண வைபவத்திற்கு அணியும் சட்டைகள், கழிவறைக் கடதாசியினால் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடைகள் பலரது கண்களை ஈர்த்தன.

சிறைக்கைதிகளால் இனியும்கூட சாதித்துக்காட்ட முடியும்  என்பதை காட்டுவதற்காக இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி கு சிகிங் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X