2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முலாம்பழங்களைப் பாதுகாப்பதற்கு பிராவை பயன்படுத்தும் பெண்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altதனது பண்ணையில் வளர்ந்து தொங்கும் முலாம்பழங்கள் கீழே விழுந்துவிடாமல்  பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என ஆராய்ந்த பெண்ணொருவர் இறுதியில் அதற்கொரு வித்தியாசமான தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

தனது பிராவைப் பயன்படுத்தி முலாம் பழங்களை பாதுகாக்கலாம் என்பதே அவர் கண்டுபிடித்த தீர்வு.

பிரிட்டனைச் சேர்ந்த 45 வயதான ரோவி மீர்ஸ்  என்பவர்,  அப்பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக 40 இற்கு மேற்பட்ட தனது உள்ளாடைகளை பழங்களில் பொருத்தியிருக்கிறார்.

"சுவீன்டன் வில்ஸில்" அமைந்துள்ள அவரது பண்ணையில்,   முலாம் பழங்கள் மிகப் பெரிதாக வளர்ந்து, பாரம் தாங்காமல் கீழே விழும் நிலையில் இருந்தனவாம்.

இது தொடர்பாக ரோவி குறிப்பிடுகையில் "நாங்கள் அற்புதமான முலாம் பழங்களை வளர்க்கின்றோம். அந்தப் பழங்கள் அந்தரத்தில் தொங்கி கீழே விழுவதை தடுப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் எனத் தோன்றியது.

இது பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது எனது மார்பகத்தைப் பார்த்தேன்.  எனது பிராவையே அப்பழங்களை தாங்கச் செய்வதற்குப் பயன்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது.  உடனே எனது பிராக்களை அந்தப் பழங்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

இப்போது எனது வாடிக்கையாளர்கள் பலர்கூட இப்பழங்களை பாதுகாப்பதற்காக அவர்களது பழைய பிராக்களை எனக்கு அனுப்பி வைத்து உதவிப் புரிகின்றார்கள்" என அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • john Thursday, 16 September 2010 07:27 PM

    இது இன்னும் சுவையை கூட்டும் நவீன முறை.

    Reply : 0       0

    xlntgson Sunday, 19 September 2010 08:26 PM

    முலாம் பழத்தின் ஆங்கிலப் பெயர் என்ன? அது எத்தனை கிலோ வரை பெருக்கும்?

    Reply : 0       0

    Niththi Sunday, 19 September 2010 10:13 PM

    முலாம் பழத்தின் ஆங்கிலப் பெயர் Melon. அது சரி. உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது Xlntgson?

    Reply : 0       0

    xlntgson Monday, 20 September 2010 08:51 PM

    எக்செலன்ஜிசன் - எக்ஸ் எல் என் ஜி சன் - சிறந்த மரியாதையான ஒருவரது மகன் என்ற பொருளில் வைத்திருக்கிறேன். எனது தனிப்பட்ட விடயங்களை தமிழ் மிரரில் வெளியிட விரும்பவில்லை. நீங்கள் தமிழ் மிரரில் வேலை செய்கின்றீர்களா என்று கூட கேட்டார், மின்னஞ்சல் மூலமாக ஒருவர். கிடைத்தால் பாக்கியம் வயது 60.அது சரி முலாம் பழங்கள் இரண்டு கிலோ வரை பெருக்குமோ? அதற்கும் மேலா? தங்குமா இந்த மார்புக்கச்சைகள்?

    Reply : 0       0

    fanaa Wednesday, 22 September 2010 06:17 AM

    அடப்பாவிகளே என்ன ஆராய்ச்சிடா இது?

    Reply : 0       0

    sheen Wednesday, 22 September 2010 09:33 PM

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள், அது இது தானோ? இதில் தானோ? இலவசமாக மார்கச்சுகளை வழங்குகின்றவர்கள் குறைந்தது நாற்பது வயதாவது கடந்தவர்களாக இருந்தால்தான் நல்லது, என்ன?

    Reply : 0       0

    abi Tuesday, 10 May 2011 08:02 PM

    இது ஒரு விசித்திரமான வேலை. ஆனாலும் பாவித்து முடித்து விட்ட பிராக்களை காய்களை தாங்குவதற்கு பயன்படுத்துவது நல்லது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .