2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒரு வருடகாலம் ஆண்வேடமிட்டு 'கணவனாக' வாழ்ந்த யுவதி

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியப் பெண்ணொருவர் தன்னுடன் ஒருவருட காலம் கணவனாக குடும்பம் நடத்திய நபர்  உண்மையில் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஓரிஷா மாநிலத்தின் ரூர்கேலா நகரைச் சேர்ந்த மீனாட்சி கஹதுவா எனும் 26 வயது  பெண்ணுக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்  குறிப்பிடுகையில் தானும்  தனது குடும்ப அங்கத்தவர்கள்  அனைவரும்  சீதாகாந்த் ரோத்ராய் (வயது 28) என்பவரை முழுமையாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.

'அவர் எனது குடும்பத்தில்  ஒவ்வொருவரையும் கவர்ந்தார். எனது குடும்பம் எங்களது திருமணத்திற்கு பூரண சம்மதம் வழங்கியது.

சீதாகாந்த் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்போது சீதனத்தையும் பெற்றுக்கொண்டார். இன்டிகா கார், தங்க ஆபரணங்கள், 50 ஆயிரம் ரூபா  பணம் போன்றவற்றை அவர் எங்களிடமிருந்துப் பெற்றுக்கொண்டார்'  என்கிறார் மீனாட்சி

ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஒருவருடகாலமாக அவர் மத ரீதியான காரணங்களைக் கூறி உடலியற் தொடர்புகளை முற்றாக தவிர்த்து வந்தார்.

'சந்தேகமடைந்த நான் பலமுறை அவரது பாலினம் குறித்து அறிய முயன்று தோற்றுப்போனேன்' என்று அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஒரு நாள் அவர் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென குளியலறை கதவை பலவந்தமாக திறந்து பார்த்தேன்.  எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்து. எனது நீண்ட நாள் அச்சம் உண்மையாகிவிட்டது.  அவர் உண்மையில் ஓர் பெண் என அறிந்தேன்' என்கிறார் மீனாட்சி.

இவ்விவகாரம்  குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 21 December 2010 09:51 PM

    இம்மாதிரியான சம்பவம் ஒன்று இலங்கையிலும் நடந்திருக்கிறது.
    காதலுக்கு தடை, காதலிக்க தடை, காதலித்து திருமணம் செய்யத் தடை என்பதெல்லாம் தர்க்கப்பட வேண்டும் என்பவர்கள் பெரியோர் நிச்சயிக்கும் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்கின்றனர். மேற்கில் இது நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் காதலித்து கர்ப்பமான பின் திருமணம் செய்து கொள்வதையே ஆதரிக்கின்றனர்! இது மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று தெரிந்தே இவ்வாறான செயல்பாடுகளை தூண்டுகின்றனர். விகிலீக்ஸ் அசஞ் விருப்ப உறவில் ஈடுபட்டும் உறை பாவிக்கவில்லை என்று வழக்கு(!)

    Reply : 0       0

    xlntgson Wednesday, 22 December 2010 09:23 PM

    transparency, accountability (டிரான்ஸ்பெரன்சி, எக்கொவுண்டபிளிட்டி) தெளிவு & பொறுப்பு என்று கூறுவார்கள்ஆனால் திருமணமில்லாமலேயே வாழ அனுமதித்து விட்டு பாட்டன் பாட்டி வயதில் திருமண சான்று இலவசமாக வழங்குவார்கள்.
    காதலுக்கு அனுமதி இலவச திருமண பதிவே!
    அல்லது காதலை பதிவு செய்ய வைக்க வேண்டும் பரிசுகள் கொடுத்து அப்போது தெளிவும் பொறுப்பும் பிரச்சினையாகாது. DNA பரீட்சைகள் தேவைப்படாது, குழந்தை யாருடையதுஎன்று!
    பாதுகாப்பானஉறவு முறைகளை பற்றி தம்பதிகள் அல்லாமல் மாணவர்கள் அறிந்து கொள்வது சிறுமி கர்ப்பம் அடைய உதவி?

    Reply : 0       0

    Rohith Thursday, 23 December 2010 07:32 AM

    ஒருபோதும் நடக்காது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .