2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன நிறுவனம் அறிமுகப்படுத்திய செக்ஸ் ரோபோ

Kogilavani   / 2011 ஜூன் 09 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீன நிறுவனமொன்று தான் தயாரித்த செக்ஸ் ரோபோ ஒன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோவுக்கு அதன் உரிமையாளரை அடையாளம் காணவும் அவருடன் உரையாடுவதற்கும்  முடியுமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரோபோவானது 5 அடி 5 அங்குல உயரமானதாகும். அதனது தோல் சிலிக்கன் ஜெல் திரவியத்தினால் ஆனது. அதன் உடல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.

'லவ் செக்ஸ் கம்பனி' எனும்  இந்நிறுவனத்தின் முகாமையாளரான லீ ஜியான் தெரிவிக்கையில், இந்த செக்ஸ்  ரோபோவை 5000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாக கூறினார்.

வேலைப் பளுவின் காரணமாக உண்மையான பெண்களை சந்திக்க அவகாசமில்லாத அதிக சம்பளம்  பெறும் நபர்களுக்கு  இவ்வாறான பாலியல் ரோபோக்களை விற்பனை செய்ய  திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் ரோபோவுக்கு தாம் விரும்பியவாறான முகத்தையும் அல்லது உடலையும் தெரிவுசெய்துகொள்ள முடியும். இந்த ரோபோ உரிமையாளரை முகத்தை அடையாளம் காணவும் தெரிவு செய்யப்படும் மொழிகளில் உரையாடுவதற்கும் ஏற்ற வகையில் கணினி 'செய்நிரல்' (program) படுத்தப்பட்டுள்ளது.

தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படக்கூடிய இந்த ரோபோ  சீனாவின் ஷான்ஸி மாகாணத் தலைநகர்  ஸியாயின்னில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் வைக்கப்பட்டபோது பெரும் எண்ணிக்கையிலானோர் அதை பார்வையிட்டனர். 


You May Also Like

  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Friday, 10 June 2011 09:18 PM

    "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!"
    இயல்பியலுக்கு ஒவ்வாத உறவு சட்டங்களை ஏற்படுத்தி ஏற்படுத்தி இவ்வாறான பொம்மைகளோடு வாழ்ந்து காலந்தள்ளவேண்டிய காலம் தான் முன்னால் தெரிகிறது.

    இயல்பியலுக்கு ஒவ்வாத உறவு சட்டங்களை ஏற்படுத்தி ஏற்படுத்தி இவ்வாறான பொம்மைகளோடு வாழ்ந்து காலந்தள்ளவேண்டிய காலம் தான் ம...')">Reply : 0       0

    pathmadeva Saturday, 11 June 2011 11:16 PM

    சீனா இன்னொரு மேற்குலக நாடாக மாறிக்கொண்டிருக்கிறதா அல்லது மாறி விட்டதா?

    Reply : 0       0

    shan Friday, 17 June 2011 01:38 PM

    இரும்பிலே ஒரு இதயம் பிறந்ததோ? முதல் முறை காதல் பிறக்குதோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X