2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் பிரசார வீடியோவுக்காக ஆடை களைந்த பெண் அரசியல்வாதி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போலந்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியொருவர் தேர்தல் பிரசார வீடியோவொன்றில் ஆடைகளை களைந்து போஸ்கொடுத்ததற்காக அவரின் சொந்தக் கட்சியினாலேயே விமர்சிக்கப்பட்டுள்ளார்.

போலந்தின் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வேட்பாளரான, காடர்ஸினா லெனார்ட் எனும் 23 வயதான பெண்ணே இவ்வாறான விமரசனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, 40 விநாடிகள் கொண்ட இந்த  வீடியோவில் தோன்றியுள்ளார்.

அந்த வீடியோவின் ஆரம்பத்தில், இறுக்கமான கோட் சூட், மேலாடை, கண்ணாடி என்பவற்றை அணிந்தவாறு கதிரையொன்றில் அமர்ந்திருக்கிறார் காடர்ஸினா.

ஆனால், அவர் இருக்கையிலிருந்து எழுவதற்கு முன்பு தனது கழுத்துப்பட்டி முதல் ஒவ்வொரு ஆடையாக கழற்றி கமெராவை நோக்கி எறிகிறார். இறுதியில் பிராவுடன் மாத்திரம் அவர்  தோன்றுகிறார்.

அக்காட்சியின் இறுதியில்  'இன்னும் வேண்டுமா? எஸ்.எல்.டிக்கு (போலந்தின் ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு) வாக்களியுங்கள் எங்களால் மட்டுமே இன்னும் அதிகமாக செய்ய முடியும்' என அவர் கூறுகிறார்.

'நான் இளையவர்களை இலக்குவைத்து பிரசாரம் செய்கிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள்  சர்ச்சைக்குரிய விஷயங்களில் தானே ஆர்வம் செலுத்துகின்றனர்' எனக் கூறி காடர்ஸினா தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

ஆனால், காடர்ஸினாவின் நடவடிக்கையை அவரின் கட்சியினரே கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கட்சி அரசியல் தொடர்பான வீடியோக்கள் இப்படியானதாக இருக்கக்கூடாது என அக்கட்சியின் பேச்சாளர் தோமஸ் கலீட்டா கூறியுள்ளார்.

'இடதுசாரி அரசியலில் இவ்வாறான விடயங்களுக்கு இடமிருப்பதாக நான் எண்ணவில்லை என செக்ஸ் விளம்பரங்களை நாம் தடைசெய்ய வேண்டும்' எனவும் அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • Nishanthan Saturday, 15 October 2011 06:46 AM

    இவர்களெல்லாம் தேர்தலில் வென்றால் என்னென்ன செய்வார்களோ?

    Reply : 0       0

    xlntgson Saturday, 15 October 2011 09:43 PM

    தேர்தல் முடிந்து வென்ற ஒரு பெண் உறுப்பினர் முன்னாள் நடிகை ஜீனா லோலா பிரிகிடா, இத்தாலியில் see through உடை அணிந்து அரை நிர்வாணமாக சபைக்கு வந்தாரே அதற்கு என்ன சொல்ல?

    Reply : 0       0

    rys111222 Sunday, 16 October 2011 05:47 PM

    thertihal vendral valibarkku elavasam............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .