2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரமாண்ட பொம்மை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொலம்பியா, பால்மிரா நகர சர்வதேச சிறுவர்கால தினத்தை முன்னிட்டு பிரமாண்டமான பொம்மையொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
2004ஆம் ஆண்டு பால்மிராவில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர்கால தினத்தின் 10ஆவது வருடத்தை கொண்டாடும் முகமாகவே இந்த பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது.

21 அடி உயரத்தையும் 4 அடி அகலத்தையும் கொண்ட இந்த பொம்மையை பெடர் வேர்ல்ட் நிர்வாகத்தினரே வடிவமைத்துள்ளனர். இதற்கு 'நானா' எனும் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
 
இந்த பொம்மையானது, உலகத்தில் மிகவும் உயர்ந்த மனிதனை விடவும் இரண்டு மடங்கு உயரமுடையதாகும்.
 
இப்பொம்மையை வடிவமைப்பதற்காக பலமான பலகை, சீமெந்து அத்திவாரம் மற்றும் இரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பெடர் வேர்ல்ட் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
2005ஆம் ஆண்டில் இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட 15 அடியும் 2 அடி அகலத்தையும் கொண்ட பொம்மையே கின்னஸ் சாதனை படைத்திருந்தது.
 
ஆனால், தற்போது கொலம்பியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பொம்மை, இத்தாலி பொம்மையின் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .