2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தர்பூசணி காற்சட்டை

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது மகன் வெப்பம் கூடிய நாட்களில் குளிர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தந்தையொருவர் தர்பூசணியொன்றை காற்சட்டையாக வடிவமைத்து அணிவித்துள்ளார்.

தாய்வானில் வசிக்கும் ருய்வெங் பேன் என்பருடைய 5 வயதுடைய மகன் தனக்கு வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தன் தந்தையிடம் தெரிவித்ததையடுத்தே இவ்வாறானதொரு வித்தியாசமான உடையை தயாரித்துள்ளார்.

இது குறித்து இதனை தயாரித்தவர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

'வெப்பம் என்று எனது மகன் கூறியவுடன் சூடு தணிய வேண்டும் என்பதற்காக நான் தர்பூசணியை வெட்டி உண்பதற்காக கொடுத்தேன். தர்பூசணியில் உள்ளிரிருந்த துண்டுகளை வெட்டியெடுத்ததனர் பின்னர் எனக்கு இதன் மூலம் அழகிய காற்சட்டைகளை தயாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
 
அதனால் நான் எனது மகனின் கால் அளவிற்கு கீழுள்ள பகுதியில் இரண்டு வட்டங்களை வெட்டியெடுத்தேன். உடலில் பொருத்திக்கொள்வதற்காக இரண்டு நாடாக்களை எடுத்து அதனுடன் பொருத்தி எனது மகனுக்கு அணிவித்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த உடையை அவரது மகன் விரும்பியதால் பின்னர் அவருக்கு ஒரு தொப்பியும் குத்துச்சண்டை கையுறைகளையும் வடிவமைத்து கொடுத்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .